Cleaning Tips : வீட்டை துடைக்கும் போது தண்ணீரில் இத கலந்து துடைங்க..கொசு தொல்லை ஒழியும்!

First Published Apr 17, 2024, 8:08 PM IST


வீட்டைத் துடைக்கும் போது,   நீங்கள் சில பொருட்களை தண்ணீரில் கலந்து துடைத்தால், வீட்டில் கொசுக்கள் தொல்லை குறையும். அது என்ன தெரியுமா..?

வீட்டை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் சுலபம். பெரும்பாலானோர் தங்களை வீட்டை சுத்தமாக இருக்க அவ்வப்போது துடைப்பார்கள். உங்கள் வீட்டையும் நீங்கள் துடைப்பீர்கள் என்றால், துடைக்கும் போது இந்த 3 பொருட்களை தண்ணீரில் கலந்து துடையுங்கள். இதனால் பூச்சிகள் மற்றும் கொசுக்கள் தொல்லை குறையும்.

வினிகர்: கோடைக்காலத்தில் வீட்டில் கொசுக்களின் தொல்லையை ஒழிக்க வேண்டுமானால், வினிகரை தண்ணீரில் கலந்து துடையுங்கள். இதனால் வீட்டினுல் பூச்சிகள் மற்றும் கொசுக்கள் வருவது தடுக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, தரையும் பளபளக்கும். 

அத்தியாவசிய எண்ணெய்: வீட்டில் கொசுக்களின் தொல்லையை ஒழிக்க, அத்தியாவசிய எண்ணெய் பயன்படுத்தலாம். அதாவது லாவெண்டர் எண்ணெய் அல்லது மிளகுக்கீரை எண்ணெய் போன்ற அத்தியாவசிய எண்ணெயை தண்ணீரில் கலந்து துடைத்தால், வீட்டில் பூச்சிகள், கொசுக்கள் போன்ற பிரச்சனைகள் இருக்காது. அதுமட்டுமின்றி, வீட்டின் தளம் சுத்தமாக இருக்கும்.

இலவங்கப்பட்டை: கோடையில் வீட்டில் கொசுக்களின் தொல்லையை ஒழிக்க முதலில், இலவங்கப்பட்டையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். பின் அந்த நீரை கொண்டு வீட்டை துடைக்கவும். இப்படி வெதுவெதுப்பான நீரால் வீட்டை துடைத்தால் தரையில் உள்ள அழுக்குகள் முற்றிலும் நீங்குவது மட்டுமின்றி, வீட்டில் ஈக்கள் மற்றும் கொசுக்களின் தொல்லையும் குறையும்.

டிஷ் வாஷ் சோப்பு: பாத்திரம் கழுவும் சோப்பு மூலமும் வீட்டில் இருக்கும் கொசுக்கள் தொல்லை குறையக்கலாம். நீங்கள் பாத்திரம் கழுவும் சோப்பு கொண்டு வீட்டை துடைத்த பிறகும், சாதாரண நீரினாலும் துடைக்க மறக்காதீர்கள்.

click me!