வைகாசி விசாகம் அன்று முருகனை எந்த முறையில் வழிபட வேண்டும் என்பதை குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்
வைகாசி விசாகம் என்பது வைகாசி மாதத்தில் வரும் விசாகம் நட்சத்திரமும் பெளர்ணமியும் சேர்ந்து வரும் நாளாகும். இந்நாளில், தான் முருகப் பெருமான் அவதரித்தார். முருகப் பெருமானின் அருளை பெற வேண்டுமென்றாலோ, உங்களது வேண்டுதல்கள் உடனே நிறைவேற வேண்டும் என்றாலோ இந்த வைகாசி விசாகம் நாளில் விரதம் இருந்து முருகனை நினைத்து வழிபட வேண்டும். நம்மை வாட்டி வதைக்கும் துன்பத்தை நீக்குவதற்காகவே இந்த வைகாசி விசாகம் விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
மேலும், ஒவ்வொரு விரதத்திற்கும் ஒவ்வொரு வழிமுறைகள் இருப்பது போல, இந்த வைகாசி விசாக விரதத்திற்கும் சில முறைகள் உள்ளன. சரி வாங்க.. இப்போது வைகாசி விசாகம் அன்று முருகனை எந்த முறையில் வழிபட வேண்டும் என்பதை குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
undefined
வைகாசி விசாகம் 2024 எப்போது?
இந்த 2024 ஆண்டு வைகாசி விசாகம் மே 22ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. எனவே, இந்நாளில் விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு விரதத்தை துவங்க வேண்டும். உங்களால் முடிந்தால் இரண்டு வேலையும் கோவிலுக்கு சென்று வாருங்கள். ஒருவேளை அப்படி முடியாதவர்கள் மாலையில் கண்டிப்பாக கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.
வீட்டில் இருந்து வழிபடுபவர்கள் முருகனுடைய படத்திற்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்து நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல், பருப்பு பாயசம் படைக்கலாம். அப்படி செய்ய முடியாதவர்கள், சர்க்கரை கலந்த பால் படைத்து மட்டும் வழிபடலாம். உங்களால் நாள் முழுவதும் விரதம் எடுக்க முடிந்தால் விரதம் இருங்கள்.. முடியாதவர்கள் பால் பழம் அல்லது ஒருவேளை உணவு மற்றும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.வைகாசி விசாகம் விரத நாளில் முருகன் கோவிலுக்கு பால் வாங்கி கொடுப்பது விசேஷமாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: வைகாசி விசாகம் 2024 எப்போது..? தேதி, நேரம் குறித்த தகவல்கள் இதோ!
அதுபோல, மாலையில் வீட்டில் முருகன் படத்திற்கு முன் நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும். பிறகுந்கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், திருப்புகழ், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம், வேல் மாறல் போன்ற முருகனுக்கு உரியவற்றை படிக்க வேண்டும். கடைசியாக முருகனுக்கு படைத்த நைவேத்தியத்தை பிரசாதமாக சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும் அதுமட்டுமின்றி, உங்களால் முடிந்தால் பிறருக்கு வைகாசி விகாசத்தன்று அன்னதானம் வழங்குங்கள்.
இதையும் படிங்க: வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு நெல்லை - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
வைகாசி விசாகம் விரதம் நன்மைகள்:
குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் தீராத பிரச்சனைகள் தீரும், செய்யும் தொழில், வியாபாரம் மற்றும் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். குறிப்பாக இந்த வைகாசி விசாகம் நாளில் விரம் இருந்து வழிபட்டால் கண்டிப்பாக உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D