இந்த விஷயங்களை எல்லாம் பெற்றோரை பார்த்து தான் குழந்தைகள் கற்றுக்கொள்கின்றனர்.. என்னென்ன தெரியுமா?

First Published Feb 12, 2024, 3:28 PM IST

குழந்தைகள் உங்களுக்கு தெரியாமலே உங்களிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?

ஒவ்வொரு குழந்தையின் நடத்தையும் பெற்றோரின் வளர்ப்பைப் பொறுத்து மாறுபடுகிறது.. ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் புத்திசாலியாகவும், நல்ல எண்ணங்களைக் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். மேலும் அவர்களை நல்ல முறையில் நடத்த பெற்றோர்களாக அவர்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்கிறார்கள். ஆனால் குழந்தைகள் உங்களுக்கு தெரியாமல் உங்களிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?

உங்கள் பிள்ளைகளுக்கு முன்னால் நீங்கள் எவ்வளவு கட்டுப்பாடாக இருந்தாலும்.. குழந்தைகள் ஒவ்வொரு நொடியும் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். உங்கள் பழக்கங்களை கவனமாக புரிந்து கொள்ளுங்கள். மேலும் ஒரு கட்டத்தில் அவர் உங்களைப் போலவே பேசுவார்கள். குறிப்பாக நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளையே குழந்தைகளும் பயன்படுத்த தொடங்கி விடுவார்கள்.

Latest Videos


எனவே குழந்தைகளின் முதல் ஆசிரியர் பெற்றோர்கள். எனவே உங்கள் பிள்ளைகள் உங்களிடமிருந்து என்னென்ன விஷயங்களைக் கற்றுக் கொள்வார்கள் என்பதை இப்போது பார்க்கலாம். ஒரு பிரச்சனை வரும் போது நீங்கள் எப்படி அதை சமாளிக்கிறீர்கள் என்பதை குழந்தைகள் கவனிப்பார்கள்.  உதாரணமாக ஒரு பிரச்சனை வந்த உடன் நீங்கள் பயந்தால் அவர்களு பிரச்சனையை பார்த்து பயப்படுவார்கள் அல்லது துணிவாக நீங்கள் எதிர்கொண்டால், பிரச்சனைகளை இப்படி தான் சமாளிக்க வேண்டும் என்று குழந்தைகள் கற்றுக்கொள்கின்றனர்.

நீங்கள் ஒரு பணியை எப்படிச் செய்கிறீர்கள் என்பதையும் குழந்தைகள் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். மேலும் வேலையின் மீதான உங்களின் விசுவாசத்தையும் அர்ப்பணிப்பையும் உங்களிடம் இருந்து தான் பிள்ளைகள் கற்றுக்கொள்கின்றனர். எனவே நீங்கள் எப்படி வேலை செய்கிறீர்களோ உங்கள் குழந்தைகளும் அவ்வாறே வேலையைச் செய்ய முயற்சிப்பார்கள்.

நீங்கள் உங்கள் துணையை எப்படி நடத்துகிறீர்கள்? பெரியவர்களை எப்படி மதிக்கிறீர்கள்? உங்கள் குழந்தைகளுக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறீர்கள்? என்பதை எல்லாம் குழந்தைகள் உன்னிப்பாக கவனிப்பார்கள். நீங்கள் மரியாதை கொடுக்கும் விதத்தை பார்த்து வளரும் குழந்தைகளும் மற்றவர்களுக்கு மரியாதையுடன் நடத்துவார்கள்.

வேலை, குடும்பம் மற்றும் சமூகத்திற்கு நாங்கள் எவ்வளவு நேரம் ஒதுக்குகிறோம் என்பதையும் உங்கள் குழந்தைகள் கவனிப்பார்கள். மேலும் வெளியாட்களை எப்படி நடத்துவது? சிலருடன் சம்பிரதாயமாக இருப்பது எப்படி? உங்கள் பிள்ளைகளுக்கு வீட்டில் எப்படி இருக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியாமலே நீங்கள் உங்கள் குழந்தைக்கு கற்றுக்கொடுக்கிறீர்கள்.

பொய் சொல்லக்கூடாது, திருட கூடாது யாரையும் ஏமாற்றக்கூடாது என்று உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் சொல்லிக்கொடுத்தால், வீட்டில் அவர்களின் முன்பு நீங்கள் எப்படி செயல்படுகிறீர்களோ அதை பொறுத்தே அவர்களின் குணநலன்கள் இருக்கும். எனவே உங்கள் குழந்தை எப்படி வளர வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ நீங்கள் முதலில் அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

click me!