Tamilnadu Rain:அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 3 மாவட்டங்களில் தரமான சம்பவம் இருக்காம்! வானிலை மையம் அலர்ட் மெசேஜ்!

First Published Apr 28, 2024, 9:06 AM IST

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Chennai Meteorological

குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமான மே 1ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 2ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Heatwave in Tamilnadu

 ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 3ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Heatwave in Chennai

சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஐந்து தினங்களில் வட தமிழக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. 

அடுத்த 5 நாட்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள் மக்களே.. கூடவே மழைக்கும் வாய்ப்பு இருக்காம்.. வானிலை மையம்!

Tamilnadu Rain

இந்நிலையில், அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட் டமாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

click me!