என்னை மகிழ்விக்கும் இடம் இது... எம்.பி ஆனதும் சத்குருவிடம் ஆசிபெற ஓடோடி வந்த கங்கனா ரனாவத் - போட்டோஸ் இதோ

First Published Jun 12, 2024, 8:49 AM IST

நடிகை கங்கனா ரனாவத், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி ஆன பின்னர் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு வந்து சத்குருவிடம் ஆசி பெற்றுள்ளார்.

MP kangana ranaut

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். இவருக்கு அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மந்தி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் அமோக வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை 74 ஆயிரத்து 755 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி எம்.பி ஆனார் கங்கனா.

kangana ranaut Visit Kovai

எம்.பி ஆன பின்னர் சத்தீஸ்கர் விமான நிலையத்தில் நடிகை கங்கனாவை பாதுகாப்பு பணியில் இருந்த பெண் ஒருவர் கன்னத்தில் பளார் என அறைவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டம் நடத்தும் விவசாயிகள் பற்றி கங்கனா சொன்ன கருத்தால் ஆவேசம் அடைந்து தாக்கியதாக அந்த பெண் கூறினார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. கங்கனாவை தாக்கிய அந்த பெண் காவலர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதையும் படியுங்கள்... புது வீட்டில் 2வது திருமண நாளை கொண்டாடிய விக்கி - நயன்... அதுவும் இந்த பிரபலங்கள் உடனா? வைரல் போட்டோஸ் இதோ

kangana ranaut Visit isha yoga centre

கங்கனா ஆன்மீக பக்தி கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதுவும் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு, கங்கனாவின் ஆன்மீக குருக்களில் ஒருவர் ஆவார். இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி ஆக பதவி ஏற்ற கையோடு நடிகை கங்கனா ரனாவத் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு விசிட் அடித்திருக்கிறார். அங்குள்ள ஆதியோகி சிலையில் தரிசனம் செய்த பின்னர் சத்குருவை சந்தித்துள்ளார் கங்கனா.

kangana ranaut Meet Sadhguru

எம்.பி.யாக இருந்தாலும் சத்குருவை பார்த்ததும் அவர் அருகில் தரையில் அமர்ந்தபடி அவரிடம் ஆசி பெற்றிருக்கிறார் கங்கனா ரனாவத். அப்போது எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள கங்கனா ரனாவத், என்னை மகிழ்விக்கும் இடம் இது என குறிப்பிட்டு இருக்கிறார். ஈஷா யோகா மையத்திற்கு எம்.பி கங்கனா ரனாவத் விசிட் அடித்தபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... மாத சம்பளம் 60 லட்சம்; நடிகைகளைவிட அதிக சொத்துக்கு சொந்தக்காரியா இருக்கும் ஷாருக்கானின் மேனேஜர் பற்றி தெரியுமா

Latest Videos

click me!