அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டியன் குழந்தைகளை கடத்த திட்டம் போட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில், பரணி மற்றும் ஷண்முகத்தால் சௌந்தர பாண்டி திட்டம் பலிக்காமல் போன நிலையில், இன்று நடிக்க போவது என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
ஒருபக்கம் தேர்தலுக்காக நாமினேஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வர, எப்படியும் 20 நிர்வாகிகளின் ஓட்டையும் வாங்கி வெற்றிபெற வேண்டும் என்கிற எண்ணத்தில், சௌந்தரபாண்டி சனியனிடம் கூறி 20 நிர்வாகிகளின் குழந்தையையும் கடத்தி, பாம் வைக்க சொல்கிறார்.
இதையும் படியுங்கள்... இனிமேல் தான் ட்விஸ்ட்டே இருக்கு! 'பாக்கியலட்சுமி' நடிகர் சதீஷ் வெளியிட்ட வீடியோவால் எகிறும் எதிர்பார்ப்பு!
சனியனும் சொந்தரபாண்டி சொன்ன வேலையை, தட்டாமல் செய்து முடித்த நிலையில், பின்னர் 20 நிர்வாகிகளிடமும் குழந்தைகளை கடத்தி வைத்திருக்கும் விஷயத்தை சொல்லி பதற வைக்கிறார். மேலும் தனக்குத்தான் ஓட்டு போடணும் என்று மிரட்ட, அந்த 20 நிர்வாகிகளின் குடும்பமும் நாங்க உங்களுக்கே ஓட்டு போடுகிறோம் எங்க குழந்தைகளை மட்டும் விட்டு விடுங்கள் என கெஞ்சி அழுகின்றனர்.
இந்த பரபரப்பான தருதத்தோடு, தேர்தல் தொடங்க 20 நிர்வாகிகளும் குழந்தைகளின் உயிரை காப்பாற்ற வேண்டும் என சௌந்தரபாண்டிக்கே ஓட்டு போடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக என்ன நடிக்க போகிறது? தேர்தலில் இந்த முறையுடன் தடைகளை தாண்டி ஷண்முகம் ஜெயிப்பாரா? இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படியுங்கள்... Top 10 Actors: இந்தியாவின் டாப் 10 பணக்கார நடிகர்கள் லிஸ்ட் வந்தாச்சு; அதில் தமிழ் ஹீரோஸ் மட்டும் இத்தனை பேரா?