சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் இயக்குனர் திருச்செல்வத்தின் மகள் திருமண வரவேற்பு நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. அதன் வீடியோ வெளியாகி உள்ளது.
எதிர்நீச்சல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கியமான சீரியல் ஆகும். இது ஜனனி, ஈஸ்வரி, ரேணுகா மற்றும் நந்தினி என்ற நான்கு நன்கு படித்த சகோதரிகளைச் சுற்றி வருகிறது. சமூகத்தின் ஆணாதிக்கக் கருத்துக்களை அவர்கள் எவ்வாறு சவால் செய்கிறார்கள் என்பது இந்த நாடகத்தின் முக்கிய கருத்தாக இருக்கிறது. விஜய் டிவியின் சீரியல்களுக்கே டப் கொடுத்தது என்றே சொல்லலாம்.
தமிழ் பார்வையாளர்கள் மத்தியில் ஒரு நல்ல ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது எதிர்நீச்சல் சீரியல். பல பிரைம்-டைம் நிகழ்ச்சிகளை விஞ்சி டிஆர்பி தரவரிசையிலும் முதலிடத்தைப் பிடித்தது என்றே கூறலாம். அதன் கதாபாத்திரங்களில் ஒன்றான ஆதி குணசேகரன் (ஜி மாரிமுத்து நடித்தார்) பார்வையாளர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றது.
அவரது திடீர் மறைவுக்கு பிறகு அவரது கேரக்டரில் வேலா ராமமூர்த்தி நடித்து வருகிறார். எதிர்நீச்சல் சீரியல் நிறைவடைய உள்ளது என்று கூறப்படும் நிலையில், இயக்குனர் திருச்செல்வம் மகள் பிரியாவின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதனை சன் டிவியின் தொகுப்பாளர் அசார் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் மகளின் திருமண வரவேற்பு நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இதில் சீரியல் பிரபலங்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.