- Home
- Gallery
- பிரேம்ஜி காதல் மனைவி இந்துவுக்கும் சினிமாவுக்கும் சம்மந்தமே இல்லை.. ஆனால் அவங்க என்ன வேலை செய்றாங்க தெரியுமா?
பிரேம்ஜி காதல் மனைவி இந்துவுக்கும் சினிமாவுக்கும் சம்மந்தமே இல்லை.. ஆனால் அவங்க என்ன வேலை செய்றாங்க தெரியுமா?
நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி இன்று தன்னுடைய காதலியை கரம்பிடித்த நிலையில்... இந்து என்ன வேலை செய்கிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Premgi And Indhu Wedding
தமிழ் சினிமாவில் இசைக்குடும்பத்து வாரிசான பிரேம்ஜி இன்று காலை திருத்தணி முருகர் கோவிலில், மிகவும் எளிமையாக தன்னுடைய காதலி இந்துவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் கிளோஸ் நட்பு வட்டாரத்தை சேர்த்தவர்கள் மட்டுமே கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
Premgi And Indhu Wedding
பிரேம்ஜி ஒரு சினிமா பிரபலம் என்பதால், இவர் திருமணம் செய்து கொள்ள உள்ள இந்துவும்... மீடியாவை சேர்ந்தவர் என்கிற செய்திகள் சமூக வலைதளத்தில் பரவ, இதற்க்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெங்கட் பிரபு அறிக்கை ஒன்றை வெளியிட்டு முற்றுப்புள்ளி விரித்தார்.
'பருத்திவீரன்' பிரச்சனை பற்றி சூர்யா பேசாமல் இருந்ததற்கு இது தான் காரணம்! பாண்டிராஜ் பகிர்ந்த தகவல்!
Premgi And Indhu Wedding
இந்த அறிக்கையில் , "இத்தனை வருடங்களாக என் குடும்பத்தாருக்கும், எனக்கும், ஆதரவையும்.. அளவில்லாத அன்பையும் வழங்கிய ரசிகர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. பாகுபலி கட்டப்பா ஏன் கொன்றார்? சொப்பன சுந்தரியை இப்போ யாரு வச்சிருக்கா? இது எல்லாவற்றையும் விட பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ என்ற உங்கள் கேள்விக்கு பதில் வரும் 9-ஆம் தேதி கிடைத்துவிடும். சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருகிய நண்பர்கள் முன்னிலையில் பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார். அம்மா வெகுவாக எதிர்பார்த்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவினர்களுடனும், நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம்.
Premgi And Indhu Wedding
இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமண பத்திரிகையை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து விட்டார். எப்படி கல்யாண பத்திரிக்கை வைரலானதோ அதேபோல் மணமகள் மீடியாவை சேர்ந்தவர் என்று கூறி புகைப்படங்கள் உலா வருகின்றன. மணமகள் மீடியாவை சேர்ந்தவர் இல்லை. திருமணம் முடிந்தவுடன் புகைப்படங்களை பகிர்வேன். எங்களுடைய பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி, அதையும் வைரலாகுமாறு கேட்டுக்கொள்கிறேன். உறுதியாக திருமண வரவேற்பில் அனைவரையும் சந்திப்போம். என தெரிவித்திருந்தார்.
அசின், பூஜா, சுவலட்சுமி என தமிழ் சினிமாவை விட்டு காணாமல் போன 7 ஹீரோயின்ஸ்! யார் யார் தெரியுமா?
Premgi And Indhu Wedding
இந்நிலையில் இன்று காலை பிரேம்ஜி தன்னுடைய காதலி இந்துவை கரம் பிடித்த நிலையில்... காலை முதலே சமூக வலைத்தளத்தில் இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. பிரேம்ஜி திருமணம் செய்து கொண்ட பெண் திரையுலகை சேர்ந்தவர் இல்லை என்பது தெளிவாகியுள்ள நிலையில், இந்து என்ன வேலை செய்கிறார் என்கிற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
Premji amaren
அதன்படி சேலத்தை சேர்ந்த இந்து, ஒரு வங்கி ஊழியராம். பிரேம்ஜிக்கும் - இந்துவுக்கு முதலில் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியுள்ளார். பல வருடம் இருவருமே இந்த் காதலை ரகசியமாகவே வைத்திருந்த நிலையில், இன்று திருமணத்தில் முடிந்துள்ளது. இந்த புதிய ஜோடிக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.