தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ், இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.சேனல் தரப்பும் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களுடன் சீரியலை கொண்டு சென்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது IPL போட்டி முடிவடைந்து விட்ட நிலையில் இனி சேனலில் எல்லா சீரியலிலும் சிக்ஸர் தான் என்பது போல ஆட்டம் ஆரம்பம் என்ற பெயரில் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் சீரியல் பிரபலங்கள் இணைந்து ஆட்டம் போட்டுள்ள இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
நினைத்தேன் வந்தாய் சீரியலில் அடுத்து சுடர், எழில் இருவரும் ஜோடி சேர போவதாகவும் பேயாக வந்துள்ள இந்துவால் நடக்க போவது என்ன? என்ற நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்களுடன் உங்களை கவர உள்ளது.
அதே போல் வீரா சீரியலில் ராமசந்திரன் குடும்பத்தை பழிவாங்க வந்துள்ள கண்மணியை வீரா எப்படி சமாளிக்க போகிறாள்? அடுத்து என்ன என்ற கோணத்தில் கதைக்களம் நகர போவதாகவும் தெரிய வந்துள்ளது. அண்ணா சீரியலில் ஒரு தங்கையை கரை சேர்த்த ஷண்முகம் மற்ற தங்கைகளை எப்படி கரை சேர்க்க போகிறான்? பெயிலில் வெளிவர போகும் சூடாமணியால் சௌந்தரபாண்டிக்கு வர போகும் சிக்கல் என்ன என்ற அதிரடியான திருப்பங்களுடன் சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் சந்தியா ராகம் சீரியல் சீனு, மாயா திருமணத்தை நோக்கி நகர உள்ள நிலையில் ஜானகி எடுக்க போகும் முடிவு என்ன? ஜெயிக்க போவது மாயாவின் காதலா? ரகுராமன் குடும்ப கௌரவமா? 20 வருடத்திற்கு பிறகு சந்தியாவால் நடந்த சம்பவம் மீண்டும் மாயாவால் நடக்க போவதால் அடுத்து என்னவாகும் என்ற விறுவிறுப்பான திருப்பங்களால் மக்களை கவர உள்ளது. அடுத்து நினைத்தாலே இனிக்கும் சீரியலில் ராணிக்கும் சித்தார்த்துக்கும் குழந்தை பிறக்க போகிறது, இதனால் இனி எல்லாமே நினைத்தாலே இனிக்கும் என்ற வார்த்தைகளுடன் அட்டகாசமாக ப்ரோமோ வீடியோ அமைந்துள்ளது.