தமிழ் சின்னத்திரையில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் 24 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த இரு வாரங்களாக இன்ட்ரோ ரவுண்ட் நடைபெற்ற நிலையில் இந்த வாரம் முதல் காம்பிடிஷன் ரவுண்ட் நடைபெற உள்ளது. இந்த சுற்றுக்கு ப்ரீ ஸ்டைல் ரவுண்ட் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த சுற்றில் இரண்டு போட்டியாளர்கள் இணைந்து ஒரு பாடலை பாட உள்ளனர், இதில் சிறப்பாக பாடிய ஒருவருக்கு தான் கோல்டன் பெர்பாமன்ஸ் ஷவர் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பெரிய அளவில் எப்போர்ட் எடுத்து பாடியுள்ளனர். குறிப்பாக சரத் சார்ஸ் மற்றும் ஸ்வேதா ஆகியோர் இணைந்து பூக்களே சற்று ஓய்வெடுங்கள் என்ற பாடலை பாட நடுவர்கள் சரத் பாடியதை பார்த்து மெய் சிலிர்த்து உள்ளனர். கார்த்திக் வாவ் வாட் எ சிங்கிங் மேன் என்று பாராட்ட ஸ்ரீனிவாஸ் நீ எதுக்கு டா இங்க வந்து பாடுற? நேரா ஸ்டுடியோவுக்கு போய் பாட வேண்டியது தானே என்று சொல்லி சரத்தை நெகிழ வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து பாலமுருகனும் சௌமியாவும் இணைந்து ஓராயிரம் நிலவே வா என்ற பாடலை பாட கார்த்திக் சரிகமப-வின் அதிசயம்னா அது பாலமுருகன் தான் என்று புகழ்ந்துள்ளார். மேலும் ஹமன் மற்றும் அருளினி என இருவரும் இணைந்து நேந்திக்கிட்டு நேந்திகிட்டு நெய் விளக்கை ஏற்றி வச்சேன் என்ற பாடலை பாடி அசத்தியுள்ளனர். பிறகு சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் பிரியனை மேடைக்கு வர வைத்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.
தஞ்சையில் பிறந்து... சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ரீல் மகளாக ஆக்ஷனில் டஃப் கொடுத்த நடிகையா இவங்க?
ப்ரியனும் அருளினியும் பேசி கொண்டதையெல்லாம் பார்த்து மேடையே கண் கலங்கியுள்ளது. அதே போல் வீரபாண்டி கோபிகா இணைந்து வழி நெடுக காட்டு மல்லி என்ற பாடலை பாடி அசத்த வீரபாண்டிக்கு கோல்டன் பெர்பாமன்ஸ் கிடைத்துள்ளது. இப்படி பல நெகிழ்ச்சியான தருணங்களுடன் இந்த வார சரிகமப நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, எனவே சரிகமப நிகழ்ச்சியை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.