- Home
- Gallery
- Prabhu Deva: 27 வருடங்களுக்கு பின் பிரபு தேவாவுடன் மீண்டும் ஜோடி சேரும் 49 வயது நடிகை! யார் தெரியுமா?
Prabhu Deva: 27 வருடங்களுக்கு பின் பிரபு தேவாவுடன் மீண்டும் ஜோடி சேரும் 49 வயது நடிகை! யார் தெரியுமா?
நடிகர் பிரபு தேவா சுமார் 27 வருடங்களுக்கு பின்... பிரபல நடிகையுடன் ஜோடி சேர உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் இந்த படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

தென்னிந்திய திரையுலகில், ஒரு நடன இயக்குனராக தன்னுடைய கேரியரை துவங்கி, பின்னர் நடிகராக மாறியவர் பிரபு தேவா. அதே போல் திரைப்பட இயக்கம் மற்றும் தயாரிப்பாளராகவும் சில வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளை தாண்டி, பாலிவுட்டிலும் வான்டெட், ரௌடி ரத்தோர், ஆக்ஷன் ஜாக்சன், தபாங் 3, போன்ற படங்களை இயக்கி உள்ளார்.
கடைசியாக பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து 2021-ஆம் ஆண்டு வெளியான 'ராதே' என்கிற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. எனவே தற்போது படம் இயக்குவதற்கு பிரேக் கொடுத்துவிட்டு, தமிழில் கைநிறைய படங்களில் கமிட் ஆகி ஓய்வில்லாமல் நடித்து வருகிறார்.
தளபதி விஜய்யுடன் 'கோட்' , 'பிளாஷ் பேக்', 'வுல்ப்', மாற்று 'முசாசி' ஆகிய படங்களில் நடித்துள்ள பிரபு தேவா... மலையாளம், மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் தலா ஒரு படத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து பிரபுதேவா தெலுங்கு இயக்குனர் சரண் உப்பலபாடி இயக்கத்தில் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
<p><strong>Minsara Kanavu - 1997</strong></p><p>The musical love story by director Rajiv Menon involving Aravind Swamy, Prabhudeva and Kajol became a smashing hit and Rahman's music was the highlight. The composer's instinct to make SPB sing this "Thanga Thamarai" song helped win the National Award.<br />SPB has once admitted that Rahman narrated the essence of the lyrics and said the song is to be sung with much feeling of a lover smitten and intoxicated with love and he sang for him. SPB said he just imitated Rahman and won the award.</p>
இந்த படத்தில் நடிகர் பிரபு தேவாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கஜோல் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஏற்கனவே இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான 'மின்சார கனவு' படத்தில் நடித்துள்ளனர். இப்படம் கஜோலுக்கு தமிழில் அறிமுக படமாகவும் அமைந்தது. இப்படம் சூப்பர் ஹிட் வெற்றிபெற்றதோடு நடிகர் பிரபு தேவாவுக்கு சிறந்த நடிகருக்கான, தேசிய விருதையும் பெற்று தந்தது.
Minsara Kanavu
இந்த படத்திற்கு பின்னர், சுமார் 27 வருடங்கள் கழித்து நடிகர் பிரபுதேவாவுக்கு கஜோல் ஜோடியாக நடிக்க உள்ளார் என்கிற தகவல் இந்த படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. இந்த படத்தில் நஸீருத்தீன் ஷா, சம்யுக்தா மேனன் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்திற்கு ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள நவீன் நூலி படத்தொகுப்பு செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.