முன்னதாக அமைச்சராக இருந்த ஆர்.கே.ரோஜா, விசாகப்பட்டினத்தில் உள்ள ருஷிகொண்டா கட்டிடங்கள் முதல்வர் ஜெகனின் குடியிருப்புக்கு ஏற்றது என்று கூறினார். தற்போது தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள் முன்னாள் முதல்வர் ஜெகனுக்கு சொந்தக் கட்டிடம் உள்ளது போல் பிரச்சாரம் செய்வதாக கூறியுள்ளார்.
ஆந்திராவில் ஆட்சி மாற்றத்துடன், ருஷிகொண்டா கட்டிடம் பற்றிய விஷயத்தை கையில் எடுத்துள்ளார்கள் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள். 1 லட்சத்து 41 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள மிக ஆடம்பரமான கட்டிடங்கள், லட்சக்கணக்கான விலை உயர்ந்த பர்னிச்சர்கள், இன்டீரியர் அலங்கார பொருட்கள் உள்ளிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அரச அரண்மனைகளை ஒத்திருக்கும் இந்த அமைப்புகளைப் பார்த்தவர்கள் சற்று அதிர்ச்சியடைந்தனர்.
ருஷிகொண்டா பேலஸ்
undefined
சுற்றுலா கட்டிடங்களை பார்த்தவர்கள், இவ்வளவு ஆடம்பரமாகவும், ரகசியமாகவும் கட்டுவார்களா என கேள்வி எழுப்ப, பொதுமக்கள் இடையே மட்டுமின்றி, அரசியலில் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்கும், ஒய்சிபிக்கும் இடையே போர் நடந்து வருகிறது. ருஷிகொண்டா கட்டிடங்கள் குறித்து முன்னாள் அமைச்சர் குடிவாடா அமர்நாத் ஏற்கனவே பதிலளித்துள்ளார். ருஷிகொண்டா கட்டிடங்கள் ஒய்.எஸ்.ஜெகனால் தனக்காக கட்டப்படவில்லை. அவை சுற்றுலா கட்டிடங்கள் என்று முன்பு இருந்தே கூறி வருகின்றனர். முதல்வர் முகாம் அலுவலகத்துக்காக என்று ஒரு போதும் சொல்லவில்லை என்றார்.
ஆந்திரா அரசியல்
குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர் போன்ற உயரதிகாரிகள் விசாகபட்டினத்துக்கு வரும்போது ருஷிகொண்டாவில் அனைத்து வசதிகளுடன் கூடிய அழகான கட்டிடங்களைக் கட்டியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. சமீபத்தில், மற்றொரு முன்னாள் அமைச்சர் ஆர்.கே.ரோஜாவும் ருஷிகொண்டா கட்டிடங்கள் சர்ச்சைக்கு பதிலளித்தார். ஆர்.கே.ரோஜா இதுகுறித்து விளக்கம் அளித்த போது, “ருஷிகொண்டாவில் சுற்றுலாத் துறையின் இடத்தில் சுற்றுலாத் துறை கட்டிடங்கள் கட்டுவது தவறா..? விசாகப்பட்டினத்தை காஸ்மோபாலிட்டன் நகரமாக வளர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள நமது அரசில் சர்வதேச தரத்துடன் கட்டிடம் கட்டுவது தவறா?
ரோஜா விளக்கம்
மழை வெள்ளத்தில் மூழ்கிய சட்டசபையையும், செயலகத்தையும் கட்டியவர்கள், ருஷிகொண்டாவில் மிக உயர்ந்த தரத்துடன் கட்டிடங்கள் கட்டப்படுவதைக் கண்டு பொறுக்க முடியாமல் போனது நியாயமா..? 2021ல் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு விரிவான விவரங்களை அளித்து ருஷிகொண்டாவின் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது உண்மையல்லவா?
61 ஏக்கரில் 9.88 ஏக்கரில் இந்தக் கட்டுமானங்களை கட்டியுள்ளோம். இதில் எங்கே விதிமீறல் இருக்கிறது...? விசாகப்பட்டினத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அரசின் பெயரில் கட்டிடங்கள் கட்டுவதும் குற்றமா?
உலக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஐந்து நட்சத்திர வசதிகளுடன் கூடிய கட்டமைப்புகளை உருவாக்குவது தவறா...? ஏழு பிளாக்குகளில் கட்டமைப்பு, வசதிகள் இருக்காது என்று டெண்டர் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது உண்மையல்லவா...?
இந்தக் கட்டமைப்புகள் குறித்த அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் அதிகாரிகள் ஒவ்வொரு கட்டத்திலும் சமர்ப்பித்திருப்பது மறைக்கப்படுமா? இத்தனை வருடங்களாக இவற்றை ஜெகன்னாவின் சொந்தக் கட்டிடங்கள் என்று விளம்பரப்படுத்தி வந்தவர்கள், இனியும் இவை அரசுக் கட்டிடங்கள் என்பதை ஏற்றுக் கொள்வார்களா..? அல்லது..?
రుషికొండలో పర్యాటక శాఖ స్థలంలో పర్యాటక శాఖ భవనాలను నిర్మించడం తప్పా..?
విశాఖ నగరాన్ని విశ్వనగరంగా అభివృద్ధి చేయాలని కంకణం కట్టుకున్న మా ప్రభుత్వంలో అంతర్జాతీయ ప్రమాణాలతో భవనం నిర్మించడం తప్పా..?
వర్షానికి కారిపోయే అసెంబ్లీని, సచివాలయాన్ని కట్టినవాళ్లకు అత్యంత నాణ్యతతో…
ஹைதராபாத்தில் சொந்த வீடு கட்டி, ஹையத் ஓட்டலில் லட்சக்கணக்கில் மக்களின் பணத்தை வாடகைக்கு வாங்கியவர்கள்... இன்று விமர்சிக்கிறார்களா..? லேக் வியூ கெஸ்ட் ஹவுஸ், பழைய செக்ரடேரியட் எல் பிளாக், எச் பிளாக் என்று 40 கோடியை விட்டு இரவோடு இரவாக விட்டு விஜயவாடா வந்தவர்கள் இன்று குறை சொல்வார்களா..? நமது முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மேல், எங்கள் மீது எவ்வளவு ஆளுமைத் தாக்குதல் நடத்தினாலும், வரும் நாட்களில் எங்களின் கட்சி பொதுப் பிரச்சனைகளுக்காகப் போராடுவதில் பின்வாங்காது” என்று ரோஜா தெரிவித்துள்ளார்.
சர்ச்சையில் ஜெகன் மோகன்
ருஷிகொண்டா கட்டிடங்களை அமைச்சராக இருந்து திறந்து வைத்த ரோஜா, விசாகப்பட்டினத்தில் உள்ள ருஷிகொண்டா அரண்மனையில் இருந்து ஜெகன் நிர்வாகம் செய்வார் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், ருஷிகொண்டா கட்டிடங்கள் சர்ச்சையை தெலுங்கு தேசம் கட்சி விடப் போவதில்லை என்றுதான் தெரிகிறது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு ருஷிகொண்டா கட்டிடங்களுக்குள் சென்ற முன்னாள் அமைச்சர் கந்தா சீனிவாச ராவ், ரகசியங்கள் அனைத்தையும் வெளியிட்டார்.
“இந்த ரகசியத்தை தேர்தலுக்கு முன் வெளியிட்டிருந்தால், 11 சீட்களில் கூட வெற்றி பெற்றிருக்க மாட்டீர்கள்.. ருஷிகொண்டா கட்டிடம் கட்டுவதில் சலசலப்பும், மூடிமறைப்பும் ஏன்? முதலில் சொன்னது சுற்றுலா திட்டம்.. பிறகு ஐந்து நட்சத்திர ஓட்டல் என்றார். அதுக்கு மேல கேம்ப் ஆபீஸ்னு சொன்னாரு, அது அரசு கட்டிடமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆந்திரா அரசியல் தற்போது மேலும் சூடுபிடித்துள்ளது.
டாடாவின் மலிவான மின்சார ஸ்கூட்டர் வரப்போகுது.. இந்தியாவே அதிரப்போகுது.. விலை எவ்வளவு?