Bigg Boss Tamil season 6: ஆரம்பிக்கலாமா... பிக்பாஸ் சீசன் 6ன் லேட்டஸ்ட் அப்டேட் ...படு குஷியில் ரசிகர்கள்...

First Published Jun 19, 2022, 10:40 AM IST

Bigg Boss Tamil season 6: பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி பற்றிய புதிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

Bigg boss tamil

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் நம்பர் 1 தொலைக்காட்சி நிகழ்ச்சியாக உள்ளது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாதது வழங்கப்படும் பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில், கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது. 

Bigg boss tamil

சினிமா பிரபலங்கள் முதல் யூட்யூப் பிரபலங்கள் வரை இந்த நிகழ்ச்சியில்,  போட்டியாளர்களாக களமிறக்கப்பட்டனர். முதல் பாகத்தில் ஆரவ் ,இரண்டாம் பாகத்தின் ரித்விகா, மூன்றாம் பாகத்தில் முகன் ராவ், நான்காம் பாகத்தில் ஆரி அர்ஜுன், 5 வது சீசனில் ராஜு ஜெயமோகன் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

bigg boss tamil 5

இதையடுத்து, 'பிக் பாஸ் அல்டிமேட்' என்கிற புதிய நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தினர். இந்த ரியாலிட்டி ஷோ வழக்கம் போல விஜய் டிவியில் ஒளிபரப்பாவதற்கு பதிலாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டது. இதில், இந்நிகழ்ச்சியை முதல் 3 வாரம் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இதையடுத்து  விக்ரம் பட ஷுட்டிங் காரணமாக அவர் விலகியதையடுத்து, சில வாரம் சிம்பு தொகுப்பாளராக களமிறங்கினார். இதில், பாலாஜி முருகதாஸ் வெற்றியாளரானார். 

Bigg boss tamil

இதையடுத்து, கமல் விக்ரம் படத்திற்கு பிறகு, விரைவில் பிக்பாஸ் சீசன் 6 ல் அனைவரையும் சந்திப்பதாகவும் அறிக்கை வெளியிட்டார். தற்போது விக்ரம் படமும் ரிலீசாகி சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றது. உலகம் முழுவதும் 350 கோடிக்கும் மேல் வசூல் செய்து, கோலிவுட்டில் புதிய சாதனையை விக்ரம் நிகழ்த்தி உள்ளது.  இதையடுத்து, அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமல் கமிட்டாகி வருகிறார். 

Bigg boss tamil

இந்த பிஸியான சமயத்தில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி பற்றிய புதிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜுன் மாத இறுதியில் துவங்கி அக்டோபர் மாதத்தில் முடிவடையும். லேட்டஸ்ட் தகவலின் படி, வரும் அக்டோபர் மாதம் 2 ம் தேதி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கப்பட உள்ளது. இதையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க போகிறார். இதில், போட்டியாளர்கள் தேர்வு விரைவில் துவங்கப்பட உள்ளதாம். இதில் யாரெல்லாம் போட்டியாளர்களான கலந்து கொள்ள போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் படிக்க.....Nayanthara: வாழ்த்துகள் தங்கமே...திருமணத்திற்கு பிறகு காதல் மனைவி நயனுக்கு....விக்னேஷ் சிவனின் முதல் பதிவு...

click me!