உடலில் கல்லோடு சேர்த்து கம்பி சுற்றியிருக்கு.!! தற்கொலை செய்பவர்கள் இப்படி செய்யமாட்டாங்க - திருநாவுகரசர்

By Ajmal Khan  |  First Published May 19, 2024, 11:50 AM IST

ராகுல் காந்தி மோடி குறித்து ஆதாரத்துடன் பேசுவதால் தான் பிரதமர் மோடியால் அதற்கு பதில் அளிக்க முடியவில்லை என தெரிவித்த திருநாவுக்கரசர் இதன் காரணமாகவே நேருக்கு நேர் விவாதத்திற்கும் அவர் வருவதற்கு தயாராக இல்லையெனவும் கூறினார். 


நேருக்கு நேர் விவாதத்திற்கு தயாராக இல்லை

தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாகவும், மோடியின் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக செய்தியாளர்களை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவவர் திருநாவுக்கரசர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ராகுல் காந்தி மோடி குறித்து ஆதாரத்துடன் தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவதால் தான் பிரதமர் மோடியால் அதற்கு பதில் அளிக்க முடியவில்லை என கூறினார். இதன் காரணமாகவே நேருக்கு நேர் விவாதத்திற்கும் அவர் வருவதற்கு தயாராக இல்லை என விமர்சித்தார். நெல்லையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயக்குமார் அவரது தோட்டத்தில் மர்ம மரணம் அடைந்த நிலையில் அவரது உடலில் கல்லோடு சேர்த்து கம்பிகள் சுற்றப்பட்டு இருந்துள்ளது. மேலும் அவரது உடலும்  எரிக்கப்பட்டிருகிறது.  

Tap to resize

Latest Videos

தற்கொலை அல்ல.. கொலை தான்

தற்கொலை செய்து கொள்பவர்கள் யாரும் இதுபோன்று செய்ய மாட்டார்கள் எனவே இந்த சம்பவம் கொலைதான். எனவே தமிழக அரசு விரைந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பெரும்பாலானவர்கள் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக தான் கருதுகிறார்கள். ஒரு சிலர் உயிரோடு இருப்பதாக கூறுகிறார்கள். எது இருந்தாலும் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவமும் முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொன்று குவித்த சம்பவமும் கண்டிக்கத்தக்கது. இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியை தனி நாடாக அறிவிப்பதற்கு உலக நாடுகளும் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநாவுக்கரசர் வலியுறுத்தினார். 

இந்த விஷயத்துல இந்தியாதான் முதலிடம்! காரணம் நம்ம பிரதமர் மோடி தான்! அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம்!

click me!