RAIN: வெளுத்து வாங்கும் மழை.!தமிழகத்தில் எந்தெந்த சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை தெரியுமா? இதோ லேட்டஸ்ட் தகவல்

First Published | May 19, 2024, 11:32 AM IST

தமிழகத்தில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வெளியூர்களுக்கு பொதுமக்கள் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது கன மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள், ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 

வெயிலும் மழையும்

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலானது வாட்டி வதைத்த நிலையில் தற்போது கோடை மழை தமிழக முழுவதும் கொட்டி வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.  நீர்ப்பிடிப்பு பகுதிகள் வேகமாக நிரம்பி வருகிறது. ஒரு சில இடங்களில் ரெட் அலர்ட்டும்,  ஆரஞ்சு அலர்ட்டும் வானிலை மையம் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பாக அந்த அந்த ஊர் பகுதி மக்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஊட்டி மலை ரயில் ரத்து

அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் சுற்றுலா பணிகள் வருவதை தவிர்க்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதிக மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு ஊட்டி மலை ரயில் சேவையும்  ரத்து செய்யப்பட்டுள்ளது.

Rain Alert: அடுத்த 3 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகுதாம் மழை! வானிலை மையம் அலர்ட் மெசேஜ்!
 

Latest Videos


kodaikanal ooty entry

கொடைக்கானலில் பாறை விழுந்து விபத்து

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை முழுவதுமாக சுற்றி பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் பாறைகள் ஒரு சில இடங்களில் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் சுற்றுலா பயணிகள் அடுத்த இரண்டு தினங்களுக்கு கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு மாநில பேரிடர் துறை அறிவுறுத்தி உள்ளது.

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு

இதே போல தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது.  இதனால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, ஐந்தருவி, ஆகிய அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் வெள்ளப்பெருக்கு எந்த நேரம் ஏற்படும் அந்த அபாயம் உள்ளதன் காரணமாக தடையானது கடந்த இரண்டு தினங்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது.
 

ooty train service

கும்பக்கரை, மேகமலை தடை

அடுத்ததாக திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கு இருக்கும் பெரும்பாலான அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  கும்பக்கரை அருவியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விதிக்கப்பட்டிருந்த தடைநீக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல சின்னசுருளி அருவி, மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

TOUR: ஊட்டி,கொடைக்கானல், குற்றாலத்திற்கு டூர் போறீங்களா.?அடுத்த 3 நாட்கள் ரிஸ்க்- சுற்றுலா பயணிகளுக்கு அலர்ட்

சதுரகிரிக்கு செல்ல தடை

இதே போல விருதுநகர் மாவட்டத்திலும் சாஸ்தா கோவில்,அய்யனார் கோவில், செண்பகத்தோப்பு, தாணிப்பாறை, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில், பிளவக்கல் அணை, கோவிலாறு அணை, காட்டழகர் கோயில் உள்ளிட்ட சுற்றுலாப் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மேலும் கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் ஆறுகள் மற்றும் குளங்கள் போன்ற நீர்நிலைகளில் இறங்க வேண்டாம் என பொதுமக்கள் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

click me!