பிக்பாஸ் போட்டியாளர்கள் வரவால் களைகட்டிய வனிதா வீட்டு திருமணம் - வைரலாகும் ஏ டீம் போட்டோஸ்

First Published Jan 21, 2024, 10:38 AM IST

வனிதா வீட்டு திருமணத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களான மாயா, பூர்ணிமா, விஜய் வர்மா, நிக்சன் ஆகியோர் ஒன்றாக வந்து கலந்துகொண்டனர்.

Bigg Boss Tamil season 7

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் அண்மையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் அர்ச்சனா முதலிடம் பிடிக்க, இரண்டாம் இடத்தை மணியும், மூன்றாம் இடத்தை மாயாவும் பிடித்தனர். 

Biggboss contestants at Vanitha family wedding

இதில் முதலிடம் பிடித்த அர்ச்சனாவுக்கு பிக்பாஸ் டிராபி உடன் ரூ.50 லட்சம் பணம் மற்றும் ரூ,15 லட்சம் மதிப்பிலான வீடு, சொகுசு கார் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் போட்டியாளர்கள் ஏ டீம், பி டீம் என பிரிந்து இறுதிவரை விளையாடினர். இதில் ஏ டீமில் மாயா, பூர்ணிமா, நிக்சன், விஜய் வர்மா, ஜோவிகா, சரவண விக்ரம், அக்‌ஷயா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். 

bigg boss contestants

அதேபோல் பி டீமில் விஷ்ணு, மணி, தினேஷ், அர்ச்சனா, கூல் சுரேஷ், பிராவோ ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் இந்த டீம்கள் ஒன்று சேராமல் தனித்தனியே சுற்றி வருகின்றனர். குறிப்பாக பிக்பாஸ் ஏ டீமில் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான வனிதா ஒரு அங்கமாகவே இணைந்துவிட்டார். 

இதையும் படியுங்கள்... டைட்டில் இல்லாட்டி என்ன? பூர்ணிமா ரவி காட்டில் பெய்யும் அடை மழை - விரைவில் வரும் அடுத்த பட அறிவிப்பு!

Nixen, Poornima, Vanitha

பிக்பாஸ் ஏ டீமில் தனது மகள் ஜோவிகாவும் இருப்பதால், அவரது நண்பர்கள் அனைவரையும் தன் வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்துவிட்டார். அண்மையில் மாயா, கானா பாலா ஆகியோர் வனிதாவின் வீட்டிற்கு சென்று கேங் ஆக பார்ட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

Poornima Ravi, Vanitha

இந்த நிலையில், தற்போது தனது உறவினரின் திருமணத்திற்கு பிக்பாஸ் போட்டியாளர்களை அழைத்துச் சென்று, அங்கு சாப்பிடும்போது அவர்களுடன் எடுத்த புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் வனிதா, அதில் மாயா, நிக்சன், விஜய் வர்மா, பூர்ணிமா, ஆகியோர் இடம்பெற்று பங்கேற்று உள்ளனர்.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் முடிந்தும் தொடரும் பகை... வெளியிலும் ஏ டீம்; பி டீம் ஆக சுற்றும் போட்டியாளர்கள் - வைரலாகும் போட்டோஸ்

click me!