அடிக்குற வெயிலுக்கு ஏசி இல்லாம தூங்க முடியல சார்; மது போதையில் ஏடிஎம் மையத்தில் குடியேறிய ஆசாமி

By Velmurugan s  |  First Published May 2, 2024, 11:47 AM IST

குடிபோதையில் வெயில் தாங்க முடியாமல் ஏடிஎம் மையத்தில் படுத்திருந்த நிலையில், பணம் எடுக்க வந்தவர்கள் போதை ஆசாமியை பார்த்து அச்சத்துடன் வெளியேறினர்.


புதுச்சேரிக்கு வேலை தேடி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ரயில்கள் மூலம் நாள் தோறும் பலர் வருகின்றனர். அதேபோன்று பல்வேறு வெளிமாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் புதுச்சேரியில் பல்வேறு பணிகளையும் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கேரளாவில் இருந்து ரயில் மூலம் புதுச்சேரிக்கு வேலை தேடி வந்த ஒருவர் வில்லியனூர் ரயில்வே நிலையத்தில் இறங்கி உள்ளார்.

அசுர வேகத்தில் பாலத்தில் இருந்து கீழே இறங்கிய தனியார் பேருந்து; திடீரென குறுக்கே பாய்ந்த லாரி - தருமபுரியில் கோர விபத்து

Tap to resize

Latest Videos

undefined

அப்போது புதுச்சேரியில் கடுமையான வெயில் மற்றும் அனல் காற்று வீசவே கையில் இருந்த காசுக்கு மது குடித்து விட்டு வந்த முதியவர் மது போதையில் வில்லியனூர் ரயில்வே நிலையம் அருகே உள்ள ஏடிஎம் அறைக்குள் சென்று ஏ.சி அறையில் படுத்து அயர்ந்து தூங்கிவிட்டார். அப்போது ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்தவர்கள் ஒருவர் ஏடிஎம் அறைக்குள் படுத்து தூங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அருகில் உள்ள வில்லியனூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தன் பிஞ்சுக் குழந்தைகளின் முகம் கூட காணாமல் பிரசவத்தில் உயிரிழந்த மகப்பேறு மருத்துவர்.! புதுக்கோட்டையில் சோகம்

இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஏடிஎமின் ஏ.சி,அறையில், ஊரிலிருந்து எடுத்து வந்த பையை தலைக்கு சொகுசாக வைத்து கொண்டு முதியவர் படுத்து ஆசுவாசமாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரை தட்டி எழுப்பிய போலீசார் இது ஏடிஎம் மையம் இங்கே எல்லாம் படுத்த தூங்க கூடாது. உடனடியாக கிளம்புங்கள் என்று கூறியதுடன் அவரிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது அவர் கேரளாவில் இருந்து வேலை தேடி புதுச்சேரிக்கு வந்ததாகவும் வெயில் தாங்க முடியவில்லை. அதனால் ஏடிஎமின் ஏ.சி அறையில் படுத்து தூங்கிவிட்டதாகவும் தெரிவித்தார். இதனை அடுத்து அவரை அங்கிருந்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

click me!