கடந்த வாரம் வாக்குப்பதிவு முடிந்தபோதும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்படாமல் இருந்ததால் மதுபானக் கடைகள் இரவு 10 மணிக்கு மூடப்பட்டன. தேர்தலுக்கு முன், இரவு 11 மணிவரை செயல்பட்டு வந்தன.
தேர்தல் நடந்து முடிந்ததை அடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மதுபான கடைகளை இரவு 11 மணி வரை திறந்திருக்க கலால்துறை அனுமதி அளித்துள்ளது.
புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததன் காரணமாக மதுக்கடைகள் இரவு 10 மணிக்கே மூட உத்தரவிடப்பட்டது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி புதுவையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. இதனையடுத்து அங்கு மது விற்பனையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
தேர்தலுக்கு முன், புதுவையில் உள்ள மதுபான கடைகள் இரவு 11 மணிவரை செயல்பட்டு வந்தன. சுற்றுலா உரிமம் பெற்ற பார்கள் இரவு 12 மணிவரை இயங்கி வந்தன. கடந்த வாரம் வாக்குப்பதிவு முடிந்தபோதும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்படாமல் இருந்ததால் மதுபானக் கடைகள் இரவு 10 மணிக்கு மூடப்பட்டன.
வெப்ப அலையை வெல்வது எப்படி? பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
இந்நிலையில், வாக்குப்பதிவு நிறைவடைந்து விட்டது என்பதால் மதுக் கடைகளை மீண்டும் இரவு 11 மணிவரை திறந்து வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கலால்துறை சார்பில் தேர்தல் துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கலால்துறை விடுத்த வேண்டுகோளை ஏற்று, புதுவை, காரைக்கால் பகுதிகளில் உள்ள மதுபான கடைகள் இரவு 11 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் இதற்கான அதிகாரபூர்வ உத்தரவை வெளியிட்டுள்ளார்.