புதுச்சேரியில் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பச்சை பசேல் என பசுமை வாக்குச்சாவடி அமைத்து வாக்காளர்களுக்கு கூழ், மோர், பதநீர் அளித்து உபசரிப்பு.
புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு இன்று வாக்கு பதிவு நடைபெறுகிறது. இதற்காக புதுச்சேரியில் 967 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் சிறப்பாக பசுமை வாக்குச்சாவடி என உருவாக்கப்பட்டுள்ளது. பசுமை வாக்குச்சாவடி மிஷன் வீதியில் உள்ள வஉசி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது.
என்ன ஆபிசர் இதெல்லாம்? வாக்காளர்களுக்காக அதிகாரிகளுடன் மல்லுகட்டிய அண்ணாமலை
undefined
பள்ளியின் நுழைவு வாயிலில் தென்னை ஓலைகளைக் கொண்டு கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மூங்கில் மரங்களைக் கொண்டு வரவேற்பு குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாழை மரத்தில் தோரணங்களும், கம்பு, மக்கா சோளம், பனை ஓலை, குருத்தோலை ஆகியவற்றை கொண்டு தோரணங்களும் அமைத்து வாக்காளர்களை தேர்தல் துறை வரவேற்கிறது.
மேலும் காகிதத்தினால் உருவாக்கப்பட்ட இயற்கையிலான பொம்மைகள், பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட பித்தளை பொருட்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வாக்களிக்க வரும் வாக்காளர்கள் இதனை பார்வையிட்டு மகிழ்வதுடன் அவர்களுக்கு கம்பு, கேழ்வரகு கூழ் வழங்கப்படுகிறது. புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட வ.உ.சி பள்ளி 1886 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மிகப் பழமையான பள்ளி அதனால் தான் இந்த பசுமை வாக்குச்சாவடி இங்கு உருவாக்கப்பட்டது. மேலும் ராஜ்பவன் தொகுதியில் அதிகம் படித்தவர்கள் இருந்தாலும் இங்கு ஆண்டுதோறும் குறைந்த அளவிலே மக்கள் வாக்கு பதிவு செய்கின்றனர். அவர்களை வரவேற்கும் விதமாக இந்த பசுமை வாக்குச்சாவடி உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.