உங்கள் பட்ஜெட் ரூ.15 ஆயிரம் ரூபாய் தானா.. பட்ஜெட்டிற்குள் அடங்கும் தரமான 5 ஸ்மார்ட்போன்கள்..

First Published Jun 11, 2024, 10:48 AM IST

உங்கள் பட்ஜெட் ரூ. 15,000 வரை இருந்தால் உங்களுக்கான பல தேர்வுகள் உள்ளன. சாம்சங், விவோ போன்ற முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகள் போன்றவற்றின் விலை மற்றும் முக்கிய அம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

Best Phones Under 15000

டெக்னோ போவா 5 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் முழு HD + டாட்-இன் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இதில் 5000mAh பேட்டரி, 68W ஃபாஸ்ட் சார்ஜிங், 50MP பிரதான கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமரா போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த ஃபோன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது, அமேசானில் இதன் விலை ரூ.14,999.

Motorola G64

மோட்டோரோலா ஜி64 போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பகத்துடன் வருகிறது. இது 6.5 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே, 50MP (OIS) + 8MP பின்புற கேமரா, 16MP முன் கேமரா மற்றும் 6000mAh பேட்டரி போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999.

Samsung Galaxy F15 5G

சாம்சங் கேலக்சி எப்15 போனை ரூ.15,000க்கும் குறைவாகப் பெறலாம். 14,499க்கு Flipkartல் வாங்கலாம். 6.5 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே, 6000mAh பேட்டரி, 50MP+5MP+2MP டிரிபிள் ரியர் கேமரா செட்டப், 13MP முன்பக்க கேமரா போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

Vivo T3x

விவோ டி3எக்ஸ் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ போனின் விலை ரூ.14,999. நீங்கள் Flipkart இல் வாங்கலாம். இதில் 6.72 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே உள்ளது. இது தவிர, நீங்கள் 50MP மற்றும் 2MP இரட்டை கேமரா அமைப்பு மற்றும் 8MP முன் கேமராவைப் பெறுவீர்கள். 6000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் இந்த போன் சிறந்த பவர் பேக்கப்பை கொடுக்கும்.

Xiaomi Redmi 12 5G

ஜியோமி ரெட்மி 12 ஸ்மார்ட்போனில் 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் இருக்கும். 50MP + 2MP பிரதான கேமரா தவிர, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 6.79 இன்ச் முழு HD + டிஸ்ப்ளே மற்றும் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் Flipkart இல் ரூ.13,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நத்திங் ஃபோன் (3)... சி.எம்.எஃப். ஃபோன் (1)... சஸ்பென்ஸ் வைத்து டீஸர் வெளியிட்ட நத்திங்!

Latest Videos

click me!