போட்டுதள்ள கிளப்பிய கணவர்! கள்ளக்காதலனிடம் போட்டுக்கொடுத்த மனைவி! இறுதியில் சல்லி சல்லியாய் சிதைத்த பயங்கரம்

By vinoth kumar  |  First Published Jun 25, 2024, 10:58 AM IST

மீஞ்சூர் அடுத்த தோட்டக்காடு பகுதியைச் சேர்ந்த  ரவுடி விஷ்ணு.  இவரும், லட்சுமணனும், புழல் சிறையிலிருந்த போது பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாகி உள்ளனர். 


மனைவியுடனான கள்ளக்காதலை தட்டிக்கேட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சின்னக்காவனம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (26). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது திருட்டு, வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.  இந்நிலையில் மீஞ்சூர் அடுத்த தோட்டக்காடு பகுதியைச் சேர்ந்த  ரவுடி விஷ்ணு.  இவரும், லட்சுமணனும், புழல் சிறையிலிருந்த போது பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாகி உள்ளனர். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: காட்டுப்பகுதியில் மருமகள் கல்லூரி மாணவனுடன் உல்லாசம்! நேரில் பார்த்த மாமியார்! அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?

 இதனால் லட்சுமணன் வீட்டிற்கு விஷ்ணு அவ்வப்போது வந்து சென்றுள்ளார்.  அப்போது, லட்சுமணனின் மனைவி ரம்யாவுடன் விஷ்ணுவுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் கணவர் லட்சுமணனுக்கும் தெரியவந்ததை அடுத்து இருவரையும் கண்டித்துள்ளார். இதனால், கணவர், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 

நேற்று முன்தினம் லட்சுமணனுக்கும் மனைவி ரம்யாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர், உனது கள்ளக்காதலனை கொலை செய்ய போவதாக ஆவேசத்துடன் புறப்பட்டு சென்றுள்ளார். இதுகுறித்து கள்ளக்காதலனுக்கு ரம்யா தகவல் கொடுத்துள்ளார். இதனால் உஷாரான விஷ்ணு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து லட்சுமணனை கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளனர். 

இதையும் படிங்க:  அடக்கடவுளே.. இதுக்கலாமா அம்மாவையும் தம்பியும் கொலை பண்ணுவாங்க.. சென்னையில் நடந்த பயங்கரம்..!

இதுகுறித்து தகவலறிந்த மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று லட்சுமணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மீஞ்சூர் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் காணியம்பாக்கம் தொப்பு காலணியை சேர்ந்த சாது(22), தோட்டகாடு மோட்டு காலணி ஹரிஸ்(20), வெள்ளம்பாக்கத்தை சேர்ந்த கார்த்தி(20) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் முக்கிய குற்றவாளியான விஷ்ணு தலைமறைவாக உள்ளார். 

click me!