Asianet News TamilAsianet News Tamil

காட்டுப்பகுதியில் மருமகள் கல்லூரி மாணவனுடன் உல்லாசம்! நேரில் பார்த்த மாமியார்! அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?

பக்கத்து வீட்டில் குடியிருக்கும் மணிகண்டன் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். இவருக்கும் பவித்ராவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

illegal love.. daughter in law killed her mother in law tvk
Author
First Published Jun 25, 2024, 7:24 AM IST

எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மருமகளை கண்டித்த மாமியார் கழுத்தை நெரித்து கொன்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அடுத்த கரியபெருமாள் வலசை கிராமத்தை சேர்ந்தவர் அலமேலு (48). இவருக்கு ஏழுமலை (20), சேட்டு (18) என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அலமேலுவின் அண்ணன் மகளான பவித்ரா (20) என்பவரை ஏழுமலைக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் மணிகண்டன் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். இவருக்கும் பவித்ராவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. 

இதையும் படிங்க: அடக்கடவுளே.. இதுக்கலாமா அம்மாவையும் தம்பியும் கொலை பண்ணுவாங்க.. சென்னையில் நடந்த பயங்கரம்..!

இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் மாமியாருக்கு தெரியவந்ததை அடுத்து 2 பேரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். நேற்று முன்தினம் காலையும் இதுதொடர்பாக மாமியார்-மருமகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஆடு மேய்க்க சென்ற பவித்ரா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் மாமியார் மருகளை தேடிச் சென்றுள்ளார். அப்போது, பவித்ராவும், மணிகண்டனும் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால், மாமியார் தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் மற்றும் பவித்ரா 2 பேரும் சேர்ந்து அலமேலுவை அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் இருவரும் சேர்ந்து அலுமேலு உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு எதுவும் தெரியாதது போல வீட்டுக்கு சென்றுள்ளனர். இதனிடையே நீண்ட நேரமாகியும் தாய் வீடு திரும்பததால் அதிர்ச்சியடைந்த 2வது மகன் நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். அப்போது தனியார் நிலத்தில் பாதி உடல் எரிந்த நிலையில் அலமேலு கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். 

இதையும் படிங்க:  நண்பனை வீட்டில் விட்டது தப்பா போச்சு.. மனைவியை கரெக்ட் செய்து உல்லாசம்! தட்டிக்கேட்ட கணவருக்கு நடந்த கொடூரம்

இதுதொடர்பாக ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அலமேலு உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சந்தேகத்தின் பேரில் பவித்ராவை பிடித்து விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து கிடுக்குப்பிடி விசாரணையில் கள்ளக்காதலன் மணிகண்டன், அலமேலுவை கழுத்தை நெரித்து கொலை செய்து தீ வைத்து எரித்தது தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios