Latest Videos

இரத்த தானம் செஞ்சா இத்தனை நன்மைகள் கிடைக்குமா?! தெரிஞ்சா ஷாக்காவீங்க..!

By Kalai SelviFirst Published Jun 25, 2024, 11:12 AM IST
Highlights

இந்த கட்டுரையில் இரத்த தானம் செய்வதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இரத்ததான ஒரு சிறந்த தானமாக கருதப்படுகிறது. ஏனென்றால், நீங்கள் இரத்த தானம் செய்யும் போது உங்கள் இரத்தத்தை மட்டும் தானம் செய்யவில்லை ஒன்று அல்லது மேற்பட்ட நபர்களுக்கு உயிர் கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒருவருக்கு நேரடியாக இரத்தம் செலுத்தப்படும் போது நீங்கள் யாருக்கு ரத்தம் செலுத்துகிறார்களோ அந்த நபரின் உயிர்  காப்பாற்றப்படுகிறது. ஆனால் நீங்கள் தொடர்ந்த இரத்த தானம் செய்யும் போது ரத்தத்தை தவிர அதிலிருந்து பிரித்தெடுக்கும் RBC மற்றும் பிளாஸ்மாவும் வெவ்வேறு நபர்களுக்கு மாற்றப்படும். அதாவது நோயாளிகளுக்கு எது தேவையோ, அது அவருக்கு கிடைக்கும்.

இரத்ததானம் தொடர்பாக நம் நாட்டில் பல வகையான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால், இன்னும் நோயாளிகள் தங்கள் தேவைக்கு ஏற்ப இரத்தத்தை பெற முடியவில்லை. காரணம், இரத்த தானம் தொடர்பாக மக்கள் இடையே பரப்பப்படும் தவறான கருத்துக்களே. மேலும், இரத்த தானம் செய்வதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றிய தகவல் சிலருக்கு இன்னும் தெரிவதில்லை. எனவே, இந்த கட்டுரையில் இரத்த தானம் செய்வதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  ‘ரத்தம் விற்பனைக்கு இல்லை’: இதை தவிர அனைத்து கட்டணங்களையும் தள்ளுபடி செய்ய மத்திய அரசு அதிரடி முடிவு..

இரத்ததானம் உடலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது?
ஒருவர் இரத்த தானம் செய்யும் போது அவரது உடலில் இரத்த பற்றாக்குறை ஏற்படாது. ஏனெனில், இரத்த தானம் செய்வதற்கு முன் தானம் செய்பவரின் ஹீமோகுளோபின் இரத்த அளவு மற்றும் இரத்த அழுத்தம் போன்ற அனைத்தையும் மருத்துவர்கள் பரிசோதிப்பார்கள். மேலும் இரத்த தானம் செய்யும் பொது உடலுக்கு இந்த நன்மைகள் கிடைக்கும். அவை..

இரத்தத்தில் இரும்புச்சத்து: ஒரு மனிதனின் உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் பல வகையான நோய்கள் அவனை சூழ்ந்து கொள்கின்றனை. அவற்றில் முதல் பிரச்சனை திசுக்களுக்கு சேதம், கல்லீரல் பாதிப்பு மற்றும் உடலின் ஆக்சிஜனேற்ற பிரச்சனை போன்றவை ஆகும். ஆனால், தொடர்ந்து இரத்த தானம் செய்பவர்களின் உடலில் இரும்புச்சத்து சீராக இருக்கும்.

இதையும் படிங்க:  டாட்டூ குத்திய நபர்கள் இரத்த தானம் செய்யலாமா? வேண்டாமா? WHO என்ன சொல்கிறது?

ஆரோக்கியமான கல்லீரலுக்கு: கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்கவும், இரத்த தானம் உதவுகிறது. 

மாரடைப்பு தடுப்பு: நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் உங்கள் இதயத்தை உங்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால் ரத்த தானம் செய்வது மிகவும் நல்லது.

இவை தவிர.. மன அழுத்தம் குறைக்கப்படுகிறது, உணர்ச்சி ஆரோக்கியம் மேம்படும், எதிர்மறை உணர்ச்சிகளில் இருந்து விடுபட உதவுகிறது, இரத்த தானம் செய்வதால் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு அபாயத்தை குறைக்கலாம்.

இவற்றை மனதில் கொள்ளுங்கள்:
ஒவ்வொரு ஆரோக்கியமான நபரும் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் இரத்த தானம் செய்யலாம். ஒரே நேரத்தில் இரத்த தானம் செய்வதன் மூலம் நீங்கள் மூன்று முதல் நான்கு பேரில் உயிரை காப்பாற்ற முடியும். மேலும், நீங்கள் ஒருவருக்கு பயனுள்ளதாக இருக்கிறீர்கள் என்ற உணர்வு உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. ஒருவரின் உயிரை காப்பாற்றுவதன் மகிழ்ச்சி உங்களை சுய திருப்தியுடன் நிரப்புகிறது. இது உங்கள் உணர்ச்சி ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில், இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் கடவுளுடன் இணைந்து இருப்பது உணர்கிறீர்கள். இது உங்கள் எல்லா வேலைகளிலும் பிரதிபலிக்கும் ஒரு வகையான நேர்மறை ஆகும்.

இரத்த தானம் செய்வதற்கான முக்கியமான விஷயங்கள்:

  • இரத்ததானம் அளிப்பவர்கள் வயது 18 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • மேலும் இரத்த தானம் செய்பவர் எடை 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு முறையும் இரத்த தானம் செய்வதற்கு இதையே குறைந்தது மூன்று மாதங்கள் இடைவெளி இருக்க வேண்டும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!