Face Serum : உங்கள் முகம் கண்ணாடி போல இருக்க.. இந்த ஹோம்மேட் சீரம் ட்ரை பண்ணுங்க..டிப்ஸ் இதோ!!

First Published Mar 13, 2024, 7:01 PM IST

இத்தொகுப்பில், வீட்டிலேயே எளிதான மற்றும் இயற்கையான சீரம் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
 

பொதுவாகவே, சரும பராமரிப்பு எல்லாருக்கும் மிகவும் அவசியம். தற்போது பல ர் இதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். பளபளப்பான, குறைபாடற்ற சருமம் இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். மேலும், சரும அழகுக்காக பலர் பல்வேறு முயற்சிகள் செய்கின்றன. சிலர்  இதற்கென ஆயிரக்கணக்கில் செலவு செய்கிறார்கள். இன்னும் சிலரோ அழகு நிலையங்களை நாடுகிறார்கள். 

குறிப்பாக, விலையுயர்ந்த கிரீம்கள், லோஷன்கள் மற்றும் மாய்ஸ்சரைசர்கள் சரும பராமரிப்புக்காக பயன்படுத்தப்படுகின்றன. அதிலும் முக்கியமாக, ஃபேஷியல் சீரம், சரும பராமரிப்பின் ஒரு பகுதியாக பலரால் பயன்படுத்தப்படுகிறது. இன்னும் சொல்ல போனால், பல வகையான சரும பிரச்சனைகளுக்கு ஃபேஸ் சீரம் தீர்வாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்போது வீட்டிலேயே எளிதான மற்றும் இயற்கையான சீரம் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம். அது உங்கள் முகத்தை மேலும் அழகாகவும், பளபளப்பாகவும், சுருக்கம் இல்லாமல் இருக்கச் செய்யும்.

இந்த சீரம் தயாரிக்க தேவையான பொருட்கள்..1 டீஸ்பூன் வைட்டமின் ஈ எண்ணெய், 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல், அரை டீஸ்பூன் சுத்தமான ரோஸ் வாட்டர், விரும்பினால், 3 முதல் 4 சொட்டு லாவெண்டர். 

இதனை தயாரிக்க முதலில், சுத்தமான கிண்ணத்தில் வைட்டமின் ஈ எண்ணெய், கற்றாழை ஜெல் மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலக்கவும். பின்னர் லாவெண்டர் அத்தியாவசிய எண்ணெயில் சில துளிகள் சேர்க்கவும். இது சருமத்தை நறுமணமாகவும், ரிலாக்ஸ்டாகவும் மாற்றுகிறது. அனைத்து பொருட்களையும் நன்கு கலக்கவும். தயாரிக்கப்பட்ட கலவையை காற்று புகாத பாட்டிலில் நிரப்பி ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.

இதையும் படிங்க: என்னங்க சொல்றீங்க.. முகத்தை அடிக்கடி கழுவினால் சருமம் பாதிக்கப்படுமா..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..

இந்த சீரம் உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவி ஒவ்வொரு இரவும் படுக்கைக்குச் செல்வதற்கு முன் மெதுவாக மசாஜ் செய்யவும். காலையில் எழுந்தவுடன் உங்கள் சருமம் புதிய பொலிவோடு புத்துணர்ச்சியோடு இருக்கும். வீட்டில் தயாரிக்கப்பட்ட சீரம் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உங்கள் சருமத்திற்கு இயற்கையான ஊட்டச்சத்தை வழங்குகிறது. இது முழுக்க முழுக்க இயற்கைப் பொருட்களால் ஆனது என்பதால், இதைப் பயன்படுத்துவதால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்பட வாய்ப்பில்லை.

இதையும் படிங்க:  அட என்ன அழகு! அப்படினு பிறர் உங்கள பாத்து சொல்லனுமா? அப்ப இந்த ஜூஸ தினமும் குடிங்க..!!

அதுபோல, இந்த சீரம் ஆழமாக ஹைட்ரேட் செய்து சருமத்தை மென்மையாக்குகிறது. வயதான எதிர்ப்பு பண்புகள் நிறைந்த இந்த சீரம் சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகளை குறைக்க உதவுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!