DOG : பூங்காவிற்கு நாய்களை வாக்கிங் கூட்டிட்டு போறீங்களா.! செக் வைத்த மாநகராட்சி- புதிய கட்டுப்பாடு அறிவிப்பு

By Ajmal KhanFirst Published May 7, 2024, 11:31 AM IST
Highlights

பூங்காவில் விளையாடிய சிறுமியை வளர்ப்பு நாய் கடித்ததில் உயிருக்கு சிறுமி போராடிக்கொண்டுக்கும் நிலையில், இனிமேல் மாநகராட்சி பூங்காக்களில் நாய்களை கொண்டுவர பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

சிறுமியை கடித்து குதறிய நாய்

சென்னை மாநகராட்சி பூங்காவில் காவலாளியான ரகு என்பரின் 5 வயது மகள் சுதக் ஷா ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பூங்காவில் விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது  பூங்கா அருகே வசிக்ககூடிய புகழேந்தி என்பவர் தான் வளர்க்கும் இந்தியாவில் வளர்க்க தடை விதிக்கப்பட்ட ரேட்வில்லர் என்ற இரண்டு நாய் உடன் பூங்காவிற்கு வந்துள்ளார். இரண்டு நாயை கயிறு கட்டி அழைத்து வராமல் இருந்துள்ளார்.

மேலும் நாயின் வாய் பகுதிக்கு எந்த ஒரு பாதுகாப்பு கவசமும் அணியாமலும் இருந்துள்ளது. அப்போது நாய் சிறுபி சுதக் ஷாவை கடித்து குதறியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் நாயிடம் இருந்து தனது குழந்தையை மீட்க போராடியுள்ளார். இருந்த போதும் நாய் விடாமல் கடித்ததில் சிறுமியில் தலையில் ஒரு பகுதி மோசமாக பாதிக்கப்பட்டது.

சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி

தொடைப்பகுதியையும் நாய் கடித்துள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்களால் மீட்கப்பட்ட சிறுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நாயின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து தடை செய்யப்பட்ட நாயை 7 நாட்களுக்குள் அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி சார்பாக உத்தரவிடப்பட்டது.  இந்தநிலையில் பூங்கா கண்காணிப்பாளர்களுக்கு சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,  கழுத்தில் சங்கிலி போட்டும், வாயை மூடியும் அழைத்து வரப்படும் நாய்களுக்கு மட்டுமே சென்னை மாநகராட்சி பூங்காக்களில் அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பூங்காவில் நாய்களுக்கு கட்டுப்பாடு

மேலும், உரிமம் பெற்ற, தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்கள் மட்டுமே பூங்காவிற்குள் அனுமதிக்கப்படும். ஒரு நபர், ஒரு வளர்ப்பு நாயை மட்டுமே பூங்காவிற்கு அழைத்து வர வேண்டும். பூங்காவிற்குள் குழந்தைகள் விளையாடும் இடத்தில் நாய்களுக்கு அனுமதி இல்லை. இந்த வழிகாட்டுதல்களை பூங்கா காவலர்கள் தீவிரமாக கண்காணித்து அமல்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விளையாடிக்கொண்டிருந்த 5வயது சிறுமியை கடித்துக் குதறிய வளர்ப்பு நாய்..ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை

click me!