விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம்... 40 வயதில் மறுமணத்துக்கு ரெடியான பீஸ்ட் பட நடிகர் - குவியும் வாழ்த்து

First Published Jan 3, 2024, 10:40 AM IST

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்த ஷைன் டாம் சாக்கோவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

மலையாள திரையுலகில் எந்த வித கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை அசால்டாக செய்து தரமான நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் தமிழில் விஜய்யின் பீஸ்ட் படம் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார் ஷைன் டாம் சாக்கோ. இதையடுத்து கடந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி அடிக்கடி சர்ச்சையிலும் சிக்குவது உண்டு. அந்த வகையில் நடிகர் விஜய்யை விமர்சித்து இவர் பேசிய பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மம்முட்டி, கமல்ஹாசனோடு ஒப்பிடும்போது விஜய் ஒன்றும் பெரிய நடிகர் அல்ல, அவர்கள் அளவுக்கு அவர் நடிப்பதில்லை. இருந்தாலும் அவருக்கு அதிக சம்பளம் கொடுப்பது ஏன் என கேள்வி எழுப்பி ஷைன் டாம் சாக்கோ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரின் இந்த பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்... பாலிவுட் இயக்குனர்களால கூட செய்யமுடியாததை சாதிச்சிருக்கான்... அவன கொண்டாடனும் - நண்பன் அட்லீ பற்றி SK உருக்கம்

இந்த நிலையில், நடிகர் ஷைன் டாம் சாக்கோ தற்போது 2-வது திருமணத்துக்கு ரெடியாகி உள்ள தகவலை வெளியிட்டு உள்ளார். அவர் தனது நீண்ட நாள் காதலியான தனுஜா என்பவரை விரைவில் கரம்பிடிக்க உள்ளார். இவர்கள் இருவரது நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்துமுடிந்துள்ளது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். ஷைன் டாம் சாக்கோ - தனுஜா ஜோடியின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகர் ஷைன் டாம் சாக்கோவுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். இவர் ஏற்கனவே தபீதா மேத்யூஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். இந்த தம்பதிக்கு 8 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், நடிகர் ஷைன் டாம் சாக்கோ தற்போது 40 வயதில் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள உள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... Premgi Marriage: எனக்கு 44 உனக்கு 24! 20 வயது வித்தியாசத்தில் காதலியை கரம் பிடிக்கும் பிரேம்ஜி! காதலி இவரா?

click me!