அவருக்கு வேற ஒரு முகம் இருக்கு.. கோலிவுட்டின் டெரர் வில்லன் ஆனந்தராஜ் - அவரை பற்றிய சீக்ரெட் சொன்ன பயில்வான்!

First Published Feb 11, 2024, 5:43 PM IST

Bayilvan Ranganathan About Anand Raj : சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரைவாழ்க்கையில் மெகா ஹிட்டான படம் தான் பாட்ஷா. அந்த படத்தில் இந்திரன் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டும் வில்லனாக நடித்திருப்பார் பிரபல நடிகர் ஆனந்தராஜ். 

Actor Anandraj Baashha

தமிழ் சினிமாவில் 1980களில் மிகக்கொடூரமான வில்லன்களில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் தான் ஆனந்தராஜ். 1988ம் ஆண்டு வெளியான ஒருவர் வாழும் ஆலயம் என்ற படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை துவங்கினார். தமிழ் சினிமா மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார் ஆனந்தராஜ்.

அடுத்த பட பணிகளை துவங்கும் கார்த்திக் சுப்புராஜ்? மகான் 2 லோடிங்? விக்ரம் வெளியிட்ட மாஸ் புகைப்படங்கள் வைரல்!

Actor anandraj

சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பயணித்து வரும் ஆனந்தராஜ், அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் வில்லனாக பணியாற்றியுள்ளார். இப்பொது தனது திரையுலக பயணத்தில் செகண்ட் இன்னிங்சில் உள்ள அவருக்கு காமெடியனாக பல பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. இந்நிலையில் அவருடைய உண்மையாக முகம் குறித்த சில தகவலை பிரபல நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார்.

Kollywood Actor Anandraj

ஆனந்தராஜ் தமிழ் சினிமாவில் மிக கொடூரமான வில்லனாக திகழ்ந்து வந்தவர், ஆனால் இந்த 35 ஆண்டுகால பயணத்தில் அவரை பற்றி எந்த கிசுகிசுவும் வந்ததில்லை, காரணம் அவர் எப்போதுமே தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் மனிதர். அரசியலிலும் அவ்வப்போது ஈடுபட்டு வந்தவர் அவர். தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரத்திற்கு அவருடைய குணத்திற்கும் சம்மந்தமே இருக்காது. அது மட்டுமல்லாமல், அவர் திரையுலகில் அறிமுகமானபோதே விக் வைத்து தான் நடிக்க துவங்கினர் என்று கூறியுள்ளார் பயில்வான்.

பிரபுதேவா இயக்கிய இந்த பிளாக்பஸ்டர் படம் தான் அதிக மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட படம்.. இத்தனை மொழிகளிலா?

click me!