மூத்த குடிமக்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டுமா? வருமான வரி சட்டம் சொல்வது என்ன?

First Published | May 19, 2024, 12:38 PM IST

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான நேரம் வந்துவிட்டது. இந்நிலையில் மூத்த குடிமக்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா? அவர்களுக்கு விதிவிலக்கு கிடைக்குமா? என்பது குறித்துப் பார்க்கலாம்.

Income Tax Act and Senior citizens

60 வயதுக்குள் உள்ளவர்கள் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருவாய் ஈட்டினால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். பழைய மற்றும் புதிய முறை இரண்டிலுமே இந்த வயது வரம்பு ஒரே மாதிரியே உள்ளது.

Senior citizen Income tax rules

வருமான வரி சட்டத்தின் கீழ், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் 80 வயதுக்கு உட்பட்டவர்களும் மூத்த குடிமக்கள் பிரிவின் கீழ் வருவார்கள். 80 வயதை எட்டியவர்களும் அதற்கு மேற்பட்ட வயதினரும் சூப்பர் சீனியர் பிரிவில் வருவார்கள்.

Latest Videos


Senior citizens IT filling

2021ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதில் இருந்து மூத்த குடிமக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. வருமான வரி சட்டத்தின் பிரிவு 194B அடிப்படையில் 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யத் தேவையில்லை.

Income tax filling for senior citizens

குறிப்பாக, 75 வயதைக் கடந்தவர்கள் பென்ஷன் மற்றும் வங்கி டெபாசிட் மூலம் கிடைக்கும் வட்டி வருவாய் இருந்தாலும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டாம். வங்கி கணக்கில் இருந்தே டிடிஎஸ் உள்ளிட்டவை பிடித்தம் செய்யப்படும்.

Senior Citizens Tax exemptions

ஆனால், 75 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள் ஆண்டுதோறும் ஒருமுறை தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியில் சில ஆவணங்களை மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். வங்கியில் சில ஆவணங்களை சமர்ப்பித்து டிடிஎஸ் பிடித்தம் செய்வதைத் தவிர்க்கவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் சில வங்கிகளில் மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கும்.

Income tax for senior citizens

60 முதல் 75 வயதுக்கு உட்பட்டவர்ககளுக்கு மூத்த குடிமக்களுக்கான வரி விலக்கு சலுகைகள் போக, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மேல் இருந்தால், 3% முதல் வருமான வரி பிடித்தம் செய்யப்படும். அவர்கள் கட்டயமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

click me!