ரூபே கார்டில் சூப்பர் ஆஃபர்! வெளிநாடுகளில் பணம் செலுத்தினால் 25% கேஷ்பேக்!

First Published | May 16, 2024, 3:43 PM IST

ரூபே கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வெளிநாடுகளில் செய்யும் பேமெண்ட்களுக்கும் சிறப்பு கேஷ்பேக் சலுகையை நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.

25% cash back on RuPay Cards

ரூபே கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வெளிநாடுகளில் செய்யும் பேமெண்ட்களுக்கும் சிறப்பு கேஷ்பேக் சலுகையை நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. ஆனால் இந்தச் சலுகை குறுகிய காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்.

NPCI offer on RuPay Cards

சலுகைக் காலத்தில் தகுதியான RuPay கார்டைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கனடா, ஜப்பான், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய 7 நாடுகளில் 25 சதவீதம் வரை கேஷ்பேக் சலுகை கிடைக்கும்.

Tap to resize

RuPay cashback

ஆனால், இந்த கேஷ்பேக் சலுகைக்கு நிபந்தனையும் உள்ளது. டிஸ்கவர் நெட்வொர்க் அல்லது டைனர்ஸ் கிளப் இன்டர்நேஷனல் கார்டுகளை ஏற்றுக்கொள்ளும் வணிகர்களிடம் மட்டுமே கேஷ்பேக் கிடைக்கும். ஆஃபர் காலத்தில் ஒரு கார்டுக்கு ஒரு பரிவர்த்தனையில் அதிகபட்ச கேஷ்பேக் தொகை ரூ.2,500 ஆக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

RuPay cards

இந்த சலுகை மே 15, 2024 முதல் ஜூலை 31, 2024 வரை செல்லுபடியாகும் எனவும் நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) கூறியுள்ளது.

RuPay offer

RuPay என்பது டெபிட், கிரெடிட், இன்டர்நேஷனல், ப்ரீபெய்ட் மற்றும் காண்டாக்ட்லெஸ் கார்டு வகையை ஆகும். RBI ஒப்புதலுடன் நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவால் தொடங்கப்பட்டது.

Latest Videos

click me!