உடனடி பணத்தேவையா? பெஸ்டு ஆப்ஷன் பெர்சனல் லோன் வாங்குறதுதான்! ஏன் தெரியுமா?

First Published | May 15, 2024, 1:46 PM IST

அவசரமாக பணம் தேவைப்படும் நேரத்தில் பெர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடன் எடுப்பது உடனடியாக கைகொடுக்கும் வழியாக இருக்கும். தனிநபர் கடன்களை நிதி நிறுவனங்களும் வங்கிகளும் விரைவாக வழங்குகின்றன. இந்த கடனைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள சாதகமான அம்சங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

Personal Loan benefits

கல்வி, மருத்துவம் போன்ற தேவைகளுக்காக உடனடியாக பணத்தேவை ஏற்படலாம். தொழில்முனைவோருக்கும் எப்போதாவது அவசரமாக அதிக அளவு பணத் தேவை ஏற்படக்கூடும். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் தனிநபர் கடன் வாங்கலாம்.

Personal Loan advantages

தனிநபர் கடன் பெறுவதில் உள்ள முக்கியமான அம்சம், அதை விரைவாகப் பெற முடியும் என்பதுதான். சில நாட்களிலே வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். சில நிதி நிறுவனங்கள் 24 மணிநேரத்திற்குள் கூட தனிநபர் கடனுக்கு ஒப்புதல் அளிக்கின்றன.

Tap to resize

Personal Loan pros

வீட்டு கடன், வாகனக் கடன் ஆகியவற்றுக்கு உத்தரவாதமாக சில ஆவணங்களை அளிக்க வேண்டியிருக்கும். தனிநபர் கடன்களுக்கு அதுபோல எந்தவிதமான உத்தரவாத ஆவணமும் கொடுக்கத் தேவையில்லை.

Personal Loan options

தனிநபர் கடனைத் திருப்பி செலுத்த பல்வேறு வசதிகள் உள்ளன. விருப்பமான ஆப்ஷனை தேர்வு செய்து கடனைத் திருப்பிக் கொடுக்கலாம். விரைவாக கடன் சுமையிலிருந்து விடுபட நினைப்பவர்கள் குறுகிய கால ஆப்ஷனை தேர்ந்தெடுக்கலாம். அதிக EMI கட்டுவது கஷ்டம் என்று நினைப்பவர்கள் நீண்ட கால ஆப்ஷன் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Personal Loan and Credit score

தனிநபர் கடன் பெற்று அதை உரிய நேரத்தில் திருப்பி செலுத்தினால் கிரெடிட் ஸ்கோர் உயரும். கிரெடிட் ஸ்கோர் சிறப்பாக இருந்தால், எதிர்காலத்தில் மீண்டும் கடன் வாங்க விரும்பினால் அதிக தொகைக்கு ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு அதிகம்.

Personal Loan

ஆனால், பெர்சனல் லோன் எடுப்பது அவசரத் தேவைக்குத்தான் பொருத்தமானது என்பதையும் நினைவில் வைக்க வேண்டும். எனவே தனிநபர் கடன் பெறுவர்கள் அந்தப் பொறுப்பை உணர்ந்து உரிய காலத்தில் கடனை அடைக்க வேண்டும்.

Latest Videos

click me!