EPFO News
இபிஎப்ஓ எனப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலம் பணியாளர்களின் வருவங்கால வைப்பு நிதி நிர்வகிக்கப்படுகின்றது. இதன்படி மாதாமாதம் பிஎஃப் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு இபிஎஃப் பெறும் ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.
EPFO Claims
அனிருத் பிரசாத் என்பவர் மருத்துவ சிகிச்சை செலவுக்காக கோரிய தொகை அவருக்கு 3 நாட்களுக்குள் கிடைத்துள்ளது. அனிருத் பிரசாத் கடந்த மே 9ஆம் தேதி சிகிச்சைக்காக பணம் தேவைப்படுகிறது என EPFO ல் விண்ணப்பித்தார். அடுத்த இரண்டே நாட்களில், அதாவது மே 11ஆம் தேதியே அவர் கோரிய முன்பணம் ரூ.92,143 அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
EPFO Auto Settlement
EPFO ல் உள்ள ஆட்டோ க்ளைம் (Auto Mode Settlement) வசதியால் அனிருத் கேட்ட பணம் விரைவாகக் கிடைத்துள்ளது. இதன்படி, ல்வி, திருமணம் மற்றும் வீடு வாங்குவதற்காக முன்பணம் கோரினால் தானாகவே அந்தப் பணம் விடுவிக்கப்படும்.
EPFO employees
நடப்பு ஆண்டில், இந்த வசதியை 2.25 கோடி பேர் பயன்படுத்திக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. EPFO மே 6ஆம் தேதி நாடு முழுவதும் இந்தச் சேவையைத் தொடங்கியது. இதுவரை 13,011 பேருக்கு 45.95 கோடி ரூபாய் விரைவாகச் விடுக்கப்பட்டுள்ளது.
EPFO claim in 3 days
2023-24 நிதியாண்டில், இ.பி.எஃப்.ஓ. 4.45 கோடி கோரிக்கைகளை செட்டில் செய்துள்ளது. அதில் 2.84 கோடி கோரிக்கைகள் முன்பணம் வேண்டி விண்ணப்பிக்கப்பட்டவை. 89.52 லட்சம் முறை ஆட்டோ-மோட் மூலம் பணம் விடுவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ க்ளைம் முறையின் கீழ் விடுவிக்கப்ப்படும் தொகையின் வரம்பு ரூ.50,000 லிருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது EPFO உறுப்பினர்களாக உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு பயனளிக்கிறது.
EPFO
இந்த ஆட்டோ செட்டில்மென்ட் முறையில் தொழிலாளர்களின் விண்ணப்பங்கள் தகவல் தொழில்நுட்ப அமைப்பு மூலம் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு தானாகவே பணம் விடுவிக்க ஒப்புதல் வழங்கப்படும். பணத்தை செட்டில் செய்ய ஆகும் காலமும் 10 நாட்களில் இருந்து 3 முதல் 4 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.