Dhanush: ஓட்டலில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு... மீண்டும் இணைகிறார்களா தனுஷ் - ஐஸ்வர்யா? பிரபலம் சொன்ன அப்டேட்

First Published Mar 25, 2024, 12:14 PM IST

நடிகர் தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் விவாகரத்து முடிவை கைவிட்டு மீண்டும் இணைய உள்ளதாக பிரபலம் ஒருவர் கூறி இருக்கிறார்.

Aishwarya Dhanush

நடிகர் தனுஷும் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும் கடந்த 2004-ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடி திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் கவனம் செலுத்தி வந்தனர். தனுஷ் ஹீரோவாக கலக்கி வரும் மறுபுறம் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஐஸ்வர்யா, தனுஷின் 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

Dhanush Aishwarya Rajinikanth seperation

பின்னர் வை ராஜா வை படத்தை இயக்கிய ஐஸ்வர்யா, இதையடுத்து 7 ஆண்டுகள் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்த ஐஸ்வர்யா, கடந்த 2022-ம் ஆண்டு நடிகர் தனுஷும், தானும் விவாகரத்து செய்து பிரிய முடிவெடுத்துள்ளதாக அறிவித்தார். 18 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பின்னர் இருவரும் விவாகரத்து முடிவுக்கு வந்ததை அறிந்து கோலிவுட்டே ஷாக் ஆனது. பின்னர் குடும்பத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து இருவரும் விவாகரத்து முடிவை கைவிட்டனர். இருந்தாலும் பிரிந்து வாழ முடிவெடுத்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். 

இதையும் படியுங்கள்... Anirudh Ravichander: தீம் மியூசிக் போடமாட்டேன்; CSK கொடுத்த ஆஃபரை நிராகரித்த அனிருத் - காரணம் என்ன?

Rajinikanth daughter Aishwarya, Dhanush

தனுஷ் உடனான பிரிவுக்கு பின்னர் மீண்டும் இயக்குனராக ரீ-எண்ட்ரி கொடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லால் சலாம் என்கிற படத்தை இயக்க கமிட் ஆனார். லைகா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் கேமியோ ரோலில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த மாதம் திரைக்கு வந்த லால் சலாம் திரைப்படம் 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் பாக்ஸ் ஆபீஸிஸ் வெறும் ரூ.20 கோடியை மட்டுமே வசூலித்து படுதோல்வியை சந்தித்தது. 

Bayilvan Ranganathan

இந்த நிலையில் தனுஷ் ஐஸ்வர்யா மீண்டும் இணைய உள்ளதாக சர்ச்சைக்குரிய சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார். இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசியுள்ள அவர், ஆந்திராவில் உள்ள ஓட்டலில் வைத்து தான் தனுஷும் ஐஸ்வர்யாவும் விவாகரத்து முடிவை எடுத்திருக்கிறார்கள். மகளின் இந்த எதிர்பாரா முடிவு ரஜினி மற்றும் அவரது மனைவி லதாவுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அவர்களை சேர்த்து வைக்க குடும்பத்தினர் முயல்கிறார்கள். தங்களுடைய மகன்களுக்காக மீண்டும் இணைய தனுஷும் ஐஸ்வர்யாவும் முடிவெடுத்துள்ளதாக சொல்கிறார்கள். விரைவில் இருவரும் இணைய வாய்ப்புள்ளது”  என பயில்வான் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... Ghilli : நல்ல வேள அவர் நடிக்கல... கில்லி படத்தில் விஜய்க்கு பதில் ஹீரோவாக நடிக்க இருந்தது இந்த மாஸ் நடிகரா?

click me!