பெரியார்... பிள்ளையாரோடு சேறும் சகதியுமாக நிற்கும் அருண்விஜய்! பாலாவின் வணங்கான் பர்ஸ்ட் லுக் இதோ

First Published Sep 25, 2023, 10:34 AM IST

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள வணங்கான் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது.

vanangaan bala

தமிழ் திரையுலகில் தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி மக்கள் மனதில் இடம்பிடித்தவர் பாலா. இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் தான் வணங்கான். இப்படத்தில் சூர்யா, கீர்த்தி ஷெட்டி ஹீரோ, ஹீரோயினாக நடிக்க பிரம்மாண்ட பொருட்செலவில் 2டி நிறுவனம் தயாரித்த இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்தாண்டு கன்னியாகுமரியில் நடைபெற்றது. அதன்பின் அடுத்தக்கட்டம் நகராமல் இருந்த நிலையில், இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார் சூர்யா.

Suriya dropped vanangaan

சூர்யா விலகியதை அடுத்து 2டி நிறுவனமும் இப்படத்தில் இருந்து விலகியது. இருப்பினும் இக்கதையை கைவிட விரும்பாத இயக்குனர் பாலா, அதனை வேறு ஹீரோவை வைத்து எடுக்க முடிவெடுத்து, அருண்விஜய்யை வைத்து வணங்கான் படத்தை மீண்டும் தொடங்கினார். அதுமட்டுமின்றி இப்படத்தை சுரேஷ் காமாட்சி உடன் சேர்ந்து தன்னுடைய பி ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் இயக்குனர் பாலாவே தயாரிக்கவும் செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்... முதல் மரியாதையில் நடிக்க மறுத்தது முதல் 15 வயது பெண்ணை திருமணம் செய்தது வரை.. எஸ்பிபி பற்றிய டாப் 10 சீக்ரட்ஸ்

Arun vijay replace suriya

இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி என்கிற இளம் நடிகை நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த நிலையில், வணங்கான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

vanangaan first look

அந்த போஸ்டரில் சேறும் சகதியுமாக இருக்கும் அருண் விஜய், ஒரு கையில் பெரியார் சிலையையும், மற்றொரு கையில் பிள்ளையார் சிலையையும் வைத்திருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள், பர்ஸ்ட் லுக்கை பார்க்கும் போதே படத்தில் பாலா மிகப்பெரிய சம்பவத்தை செய்துள்ளது போல தெரிகிறது என சிலாகித்து கமெண்ட் செய்து வருகின்றனர். வணங்கான் படத்தின் ஷூட்டிங்கை விரைவில் முடித்து படத்தை இந்த ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

இதையும் படியுங்கள்... எதிர்நீச்சல் சீரியல்: இறுதியில் வந்த அந்தக் கால் யாருடையது? ஒருவேளை அவரா இருக்குமோ? எகிறும் எதிர்பார்ப்பு

click me!