சொந்தமாக ஒரு கார் இல்லை… ஆனால் பல கோடிகளுக்கு அதிபதி.. அரவிந்த் கெஜ்ரிவால் சொத்து மதிப்பு எவ்வளவு?

First Published Mar 22, 2024, 1:10 PM IST

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோடிக்கணக்கான சொத்துக்கு சொந்தக்காரர் ஆவார். அவருக்கு சொந்தமாக கார் இல்லை என்பது உங்களுக்கும் தெரியுமா? அரவிந்த் கெஜ்ரிவால் சொத்து மதிப்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Arvind Kejriwal Net Worth

மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன், 9 முறை சம்மன் அனுப்பியும், ஒருமுறை கூட அவர் விசாரணைக்கு வரவில்லை.

Arvind Kejriwal

அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக நீடிப்பார் என்றும் சிறையில் இருந்தே ஆட்சியை நடத்துவார் என்றும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 9 முறை சம்மன் அனுப்பிய பிறகு, வியாழக்கிழமை மாலை விசாரணைக்கு வந்த அமலாக்கத்துArvind Kejriwalறை, பின்னர் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது.

Kejriwal Net Worth

டெல்லி முதல்வர் அரவிந்த் கெர்ஜிவாலுக்கு எவ்வளவு சொத்து உள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 2020ஆம் ஆண்டுக்கான தேர்தல் பிரமாணப் பத்திரத்தின்படி, கெஜ்ரிவாலுக்கு ரூ.67 லட்சத்து 42 ஆயிரத்து 870 மதிப்புள்ள அசையும் சொத்து உள்ளது.

Liquor policy case

மேலும் ரூ.2 கோடியே 77 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன. இதில், கெஜ்ரிவால் மனைவி பெயரில் ரூ.15 லட்சத்து 31 ஆயிரத்து 665 மதிப்புள்ள மியூச்சுவல் பண்ட், ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள கார், ரூ.12 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் உள்ளன.

Delhi CM Arvind Kejriwal

ரியல் எஸ்டேட் பற்றி பார்க்கும் போது, குருகிராமில் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி பெயரில் ரூ.1 கோடி மதிப்புள்ள வீடு உள்ளது, இது 2010 ஆம் ஆண்டு வாங்கப்பட்டது. myneta.info வின் படி, அரவிந்த் கெஜ்ரிவால் பெயரில் விவசாயம் சாராத நிலம் உள்ளது.

Arvind Kejriwal House

ஹரியானா மற்றும் காசியாபாத் ஆகிய இடங்களில் உள்ள இந்த நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 77 லட்சம். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடன் இல்லை. இதன் மூலம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மொத்தம் ரூ.3 கோடியே 44 லட்சத்து 42 ஆயிரத்து 870 மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளன.

சென்னை வெள்ளம்.. தூத்துக்குடி வெள்ளம்.. எவ்வளவு தண்ணீர் வந்தாலும் அசால்ட்டாக இந்த ஸ்கூட்டரை ஓட்டலாம்..

click me!