Arun Vijay: உடலில் ஒட்டு துணியின்றி... ஆக்ரோஷமாக சண்டை போடும் அருண் விஜய்! வெளியானது 'ரெட்ட தல' போஸ்டர்!

First Published Apr 23, 2024, 9:57 PM IST

அருண் விஜய்யின் 36-ஆவது படத்தின் டைட்டில் வித்தியாசமான போஸ்டருடன் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Actor Arun Vijay

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் ஒரே மகனான அருண் விஜய் நடிக்க இருக்கும் 36வது படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
 

arun vijay

அருண் விஜய் ஒரு வாரிசு நடிகர் என்பதால், ஆரம்பத்தில் பட வாய்ப்பை பெறுவது எளிதாக கிடைத்துவிட்டால்... ரசிகர்கள் மத்தியிலும், சினிமாவில் தனக்கான இடத்தை பிடிப்பதற்கு 10 வருடங்களுக்கு மேல் ஆனது. 

ராகவா லாரன்ஸ் துவங்கும் மாற்றம் அறக்கட்டளை! உதவிக்கரம் நீட்ட தயாராக இருக்கும் அவர் போட்ட விதைகள்!
 

Arun vijay

ஒரே மாதிரியான கதைக்களம் கொண்ட படங்களில் நடிக்காமல், தொடர்ந்து வித்தியாசமான கதை களத்தை தேர்வு செய்து நடிப்பது மட்டும் இன்றி, அதற்காக ரிக்ஸ் எடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார். இவர் தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்துள்ள வணங்கான் படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள நிலையில் விரைவில் வெளியாக உள்ளது.
 

இந்த படத்தை தொடர்ந்து, அருண் விஜய் தன்னுடைய 36-ஆவது படத்தை... சிவகார்த்திகேயனை வைத்து 'மான் கராத்தே' படத்தை இயக்கிய, இயக்குனர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் நடிக்க உள்ளது உறுதியானது. இன்று இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை விழா நடத்தி படக்குழு வெளியிட்டுள்ளது.

என்னால முடியல அத்தை..! ரோகிணியை கதற விடும் விஜயா.. முத்து செம்ம ஹாப்பி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்!

அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ள இந்த படத்திற்கு ரெட்ட தல என பெயரிடப்பட்டுள்ளது. இரண்டு அருண் விஜய்யும் நிர்வாணமானாக ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் காட்சி ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றுள்ளது. இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க உள்ளார். 
 

இந்த படத்தின் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் நடிகை தன்யா ரவிச்சந்திரன் மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க உள்ளனர். பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

Aru

click me!