Anikha: கூண்டுக்குள் சிக்கிய பச்சை கிளியாய் மாறிய குட்டி நயன் அனிகா.! வியக்க வைக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

First Published Mar 7, 2024, 7:39 PM IST

குழந்தை நட்சத்திரமாக இருந்து, கதாநாயகியாக புரோமோட் ஆகியுள்ள.. குட்டி நயன் அனிகா தற்போது, ரசிகர்களை வியக்க வைக்கும் விதத்தில் எடுத்து கொண்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

தமிழ் சினிமாவில், குழந்தை நட்சத்திரமாக ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும் அனைவராலும் ஹீரோ - ஹீரோயினாக ஜெயிக்க முடிவது இல்லை. அந்த வகையில் ஸ்ரீதேவியில் துவங்கி, பேபி ஷாலினி  மீனா, என ஒரு சிலர் மட்டுமே ஹீரோயினாக திரையுலகில் வெற்றி கண்டுள்ளனர்.

இந்த நடிகைகளின் வரிசையில், ''என்னை அறிந்தால்' திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து பிரபலமாகி, பின்னர் அடுத்தடுத்து மிருதன், நானும் ரவுடி தான், மாமனிதன், விசுவாசம் போன்ற படங்களில் தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் அனிகா சுரேந்திரன். மலையாள நடிகையான இவர், அசப்பில் பார்ப்பதற்கு நயன்தாரா போலவே இருப்பதால்... இவரை கோலிவுட் ரசிகர்கள் பலர் குட்டி நயன் என அழைப்பதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

ரூ.4.5 கோடி பென்ட்லி, டைமண்ட் சோக்கர்.. ராதிகாவுக்கு நிதா - முகேஷ் அம்பானி கொடுத்த காஸ்டலி பரிசுகள்!

குழந்தை நட்சத்திரமான இவர், 18 வயதை எட்டியதும்... தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியான 'புட்ட பொம்மா' படத்தின் மூலம் கதாநாயகியாக மாறினார். இதை தொடர்ந்து, மலையாளத்தில் ஹீரோயினாக இவர் நடித்த 'ஓ மை டார்லிங்' படத்தில் மிகவும் நெருக்கமான மற்றும் லிப் லாக் காட்சிகளில் நடித்ததால்... விமர்சனங்களுக்கும் ஆளானார்.

தற்போது தமிழில் தனுஷின் சகோதரி கீதா விமலா மகன் ஹீரோவாக நடித்துள்ள படத்தில், அனிகா சுரேந்திரன் கதாநாயகியாக நடித்துள்ளார். இதை தவிர தனுஷின் டி 50 படத்திலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார். அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் அனிகா, தற்போது ஒரு கூண்டுக்குள் நின்றபடி, பச்சை நிற உடை அணிந்து எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்களைவெளியிட்டு ... "நான் பறக்க விரும்பினேன், ஆனால் என் சொர்க்கம் மனிதனால் உருவாக்கப்பட்ட இரும்பு சாலையில் உள்ளது" என பதிவித்துள்ளார். இந்த போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இது தான் பர்ஃபெக்ட் வாரிசு டீம்! விஜய் மகன் சஞ்சய் படத்தின் நடிகர், நடிகை, இசையமைப்பாளர் குறித்த தகவல் இதோ!

click me!