Jawan : ஹாலிவுட் படங்களுடன் போட்டி... ஆஸ்கருக்கு நிகரான விருதுக்கு தேர்வான அட்லீயின் ஜவான் - குவியும் பாராட்டு

First Published May 8, 2024, 9:49 AM IST

அட்லீ இயக்கத்தில் வெளியாகி பாலிவுட்டில் பட்டைய கிளப்பிய ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் ஆஸ்கருக்கு நிகரான விருதுக்கு தேர்வாகி இருக்கிறது.

Atlee, Shah Rukh Khan

தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய அட்லீ, அடுத்ததாக பாலிவுட்டுக்கு சென்று நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்கிய திரைப்படம் தான் ஜவான். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும் பிரியாமணி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார்.

Jawan

ஜவான் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்தாண்டு திரைக்கு வந்தது. பாலிவுட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த இப்படம் உலகமெங்கும் வசூல் வேட்டை நடத்தி பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது. ஜவான் படத்தின் அதிரிபுதிரியான வெற்றியை தொடர்ந்து அப்படத்திற்கு விருதுகளும் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது சர்வதேச அளவில் ஜவான் படத்துக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதையும் படியுங்கள்... Kovai sarala: அப்பா இறந்ததுக்கு கூட போகல.. பணத்துக்காக இப்படி செய்தாரா கோவை சரளா - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம்

Jawan movie nominated for taurus world stunt awards

உலகளவில் புகழ்பெற்ற விருதுகளில் ஒன்றான டாரஸ் வேர்ல்டு ஸ்டண்ட் அவார்ட்ஸ் விருதுக்கு ஜவான் படம் தேர்வாகி இருக்கிறது. ஆஸ்கருக்கு நிகரான விருதாக இது கருதப்படுகிறது. இந்த விருது முழுக்க முழுக்க ஸ்டண்ட் கலைஞர்களுக்காக வழங்கப்படுகிறது. இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து சிறந்த ஸ்டண்ட் காட்சிகள் இடம்பெற்ற படங்கள் தேர்வுசெய்யப்பட்டு அதற்காக பல்வேறு பிரிவுகளில் விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான விருது விழா வருகிற மே 11-ந் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது.

anal arasu

இந்த விருது விழாவுக்கு முதன்முறையாக இந்திய திரைப்படமான ஜவான் தேர்வாகி இருக்கிறது. ஜான்விக் 4, மிஷன் இம்பாசிபிள் போன்ற படங்களுக்கு போட்டியாக ஜவான் படமும் நாமினேட் ஆகி உள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக ஜவான் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு, அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துகொண்டார். அவர் விருது வெல்ல ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... 43 வயதாகியும் முரட்டு சிங்கிளாக இருக்கும் நடிகை அனுஷ்கா ஷெட்டி... இத்தனை கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரியா?

click me!