Tamil Nadu Weather update: ஜெய் ஜக்கம்மா! நல்ல காலம் பொறக்கப் போகுது.. கோடையில் கொட்டப் போகுது மழை!!

First Published May 8, 2024, 9:55 AM IST

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் மழை குறித்து முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.

Heatwave in Tamilnadu

தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கோடை வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருந்து வந்தது. வழக்கமாக மே மாதத்தில் தொடங்கும் கோடை வெப்பம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே தொடங்கிவிட்டது. நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்தது. தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. 

Tamilnadu Rain

வெப்பத்தின் தாக்கத்தால் அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தன. இதனால், பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி விட்டனர். அரசு தரப்பிலும் பகல் நேரங்களில் தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தனர். போதாத குறைக்கு கத்திரி வெயிலும் தொடங்கி விட்டதால் அனல் காற்று நெருப்பாக வீசியது. பகல் நேரங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைத்தாலும் தமிழகத்தில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒருசில பகுதிகளில் மழை பெய்து வந்தது. 

இதையும் படிங்க: சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய கனமழை! குளு குளு சூழலால் மனம் குளிர்ந்த மக்கள்!

Chennai Meteorological Department

இந்நிலையில், தமிழகத்தில் இன்றும், நாளையும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை தெரிவித்திருந்தது. அதன்படி சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மென்  வெயில் குறையப்போகுது என தெரிவித்துள்ளார். 

Tamilnadu Weatherman

இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: ஜெய் ஜக்கம்மா... நல்ல காலம் பிறக்குப்போகுது. வெயில் குறையப்போகுது, தமிழ்நாட்டில் நல்ல மழை வரப்போகுது என கூறியுள்ளார்.

இதையும் படிங்க:  அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை ஊத்தப்போகுதாம்.. வானிலை மையம் அலர்ட்!

click me!