Dhanush : ரஜினி மகள் உடன் விவாகரத்து... விரைவில் தனுஷுக்கு இரண்டாவது திருமணம்?... பொண்ணு யார் தெரியுமா?

First Published May 27, 2024, 2:59 PM IST

ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்து பிரியும் முடிவில் உறுதியாக இருக்கும் தனுஷ், விரைவில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

Dhanush Aishwarya

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார். காதலித்து கரம்பிடித்த இந்த ஜோடிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்களும் உள்ளனர். தனுஷை திருமணம் செய்துகொண்ட பின்னர் அவரது அண்ணன் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஐஸ்வர்யா, கடந்த 2012-ம் ஆண்டு ரிலீஸ் ஆன 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

Dhanush divorce

அவர் இயக்கிய முதல் படமே உலகளவில் பேமஸ் ஆனது, அதற்கு காரணம் அப்படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் தான். பாடல்கள் ஹிட் ஆன அளவிற்கு படம் ஹிட் ஆகவில்லை. இதனால் ஐஸ்வர்யாவின் முதல் படமே தோல்வி படமாக அமைந்தது. இதையடுத்து கவுதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை திரைப்படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இப்படத்தில் தனுஷும் கொக்கி குமாராக கிளைமாக்ஸில் வந்து மாஸ் காட்டி இருந்தார். ஆனால் இப்படம் பெரியளவில் சோபிக்கவில்லை.

இதையும் படியுங்கள்... பாலிவுட் கிங்கை மிஞ்சும் ஹைதராபாத் குயின் காவ்யா மாறன்! 4 மடங்கு அதிக சொத்து இருக்காம்!

Aishwarya Dhanush Divorce

இதனால் சினிமாவுக்கு ரெஸ்ட் விட்ட ஐஸ்வர்யா, இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். அதுமட்டுமின்றி பிட்னஸிலும் ஆர்வம் காட்டி வந்த அவர் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும் இன்ஸ்டாவில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். இப்படி ஸ்மூத்தாக சென்றுகொண்டிருந்த தனுஷ் - ஐஸ்வர்யாவின் இல்லற வாழ்க்கையில் திடீர் விரிசல் ஏற்பட்டதால் கடந்த 2022-ம் ஆண்டு தாங்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக அறிவித்தனர்.

Dhanush Aishwarya Seperation

தனுஷ் ஐஸ்வர்யாவின் இந்த முடிவு ரஜினி உள்பட பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து இருதரப்பு உறவினர்களிடம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் விவாகரத்து முடிவை தள்ளிப்போட்டு வந்த தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடி, இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கோர்ட்டில் விவாகரத்து கோரி முறையீடு செய்துவிட்டனர். இதனால் இனி அவர்கள் இருவரும் இணைய வாய்ப்பே இல்லை என்பது உறுதியானது.

Dhanush Second Marriage?

இந்த நிலையில், மகனை எப்படியாவது மனம் மாற்றிவிட முயற்சி செய்த கஸ்தூரி ராஜாவின் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இதனால் மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் அவர் இறங்கி இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் உலா வருகின்றன. இனி சினிமாவில் இருக்கும் பொண்ணே வேண்டாம் என முடிவெடுத்து அவர் சொந்தத்தில் பெண் பார்த்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

இதையும் படியுங்கள்... வீட்டைவிட்டு துரத்திவிட்ட தந்தை... 3 திருமணம் செய்துகொண்ட பின்னரும் சிங்கிளாக வாழும் இந்த நடிகை யார் தெரியுமா?

Latest Videos

click me!