யாரா இருந்தாலும் வெயிட் பண்ணனும் சார்.. சில மாத காத்திருப்பு - இறுதியில் புது Porsche வாங்கிய Prithviraj!

Ansgar R |  
Published : Jun 24, 2024, 11:16 PM IST
யாரா இருந்தாலும் வெயிட் பண்ணனும் சார்.. சில மாத காத்திருப்பு - இறுதியில் புது Porsche வாங்கிய Prithviraj!

சுருக்கம்

Actor Prithviraj : பிரபல நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், தனக்கு மிகவும் பிடித்தமான Porsche நிறுவனத்தின் 911 GT3 Touring காரை இப்பொது வாங்கியுள்ளார்.

மலையாள திரை உலகில் பிரபல நடிகராகவும், தயாரிப்பாளராகவும் விளங்கி வந்த சுகுமாரனின் மகன் தான் நடிகர் பிரித்திவிராஜ் சுகுமாரன். கேரளாவில் பிறந்திருந்தாலும், தனது இளம் பருவத்தை சென்னையில் கழித்த அவர், கடந்த 2002ம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் தனது கலை பயணத்தை தொடங்கினார். 

தமிழில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான "கனா கண்டேன்" என்கின்ற திரைப்படம் தான் இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம். அதன் பிறகு "பாரிஜாதம்", "மொழி" மற்றும் "கண்ணாமூச்சி ஏனடா" உள்ளிட்ட திரைப்படங்கள் இவரை தமிழ் ரசிகர்களுக்கும் மிக நெருக்கமான ஒருவராக மாற்றியது என்றால் அது மிகையல்ல. 

Tamannaah Bhatia : மெழுகு டால் போல நிற்கும் தமன்னா.. பின்னழகில் மயங்கும் ரசிகர்கள் - லேட்டஸ்ட் ஹாட் பிக்ஸ்!

தற்பொழுது இயக்குனராகவும் மலையாள திரை உலகில் பயணித்து வரும் பிரித்விராஜ், புதிய கார் ஒன்றை வாங்கி உள்ளார். திரைத்துறை மீது அவருக்கு இருக்கும் அதே அளவிலான ஆர்வம், உயரரக சொகுசு கார்களை வாங்குவதிலும் உள்ளது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பிரித்திவிராஜ் Porsche நிறுவனத்தின் ஒரு உயர் ரக காரை வாங்கியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. 

ஆனால் சுமார் 3 முதல் 4 மாதங்களுக்கு முன்பு அவர் புக் செய்த அந்த கார் தற்பொழுது தான் அவருக்கு டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய Porsche நிறுவனமும் தனது சமூக வலைதள பக்கங்களில் தகவல்களை வெளியிட்டுள்ளது. 

Porsche 911 GT3 Touring என்ற அந்த காரின் ஆரம்ப விலை சுமார் 2.75 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் Porsche நிறுவனம், காரை டெலிவரி செய்ய தேவையான நேரத்தை எடுத்துக்கொண்டு, அந்த காரை உரிமையாளர்களின் வீட்டுக்கே கொண்டு சென்று வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளது. 

இந்நிலையில் நேற்று அந்த நிறுவனம் பிரித்விராஜிடம் அந்த காரை ஒப்படைக்கும் போது அவருடைய மனைவியும் உடன் இருந்தார். இது குறித்து Porsche வெளியிட்ட வீடியோ ஒன்றும் வைரலாகி வருகின்றது. 

திருமணத்திற்கு 44 வருட பழமையான அம்மாவின் புடவையை கட்டி இருந்த சோனாக்ஷி! வரவேற்பு புடவையின் ரேட் தெரியுமா?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

தென்னிந்தியாவில் வசூல் ராஜா யார்? 2025ல் பாக்ஸ் ஆபிஸை அதிரவிட்ட டாப் 10 மூவீஸ் ஒரு பார்வை
யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுக்கும் ஆதி குணசேகரன்... எதிர்நீச்சல் சீரியலில் அடிபொலி ட்விஸ்ட் வெயிட்டிங்