அகமதாபாத்தில் வெற்றி, தோல்வியை தீர்மானித்த டாஸ் – முன் கூட்டியே உஷாரான சஞ்சு சாம்சன்!

First Published May 23, 2024, 2:44 PM IST

அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற தகுதிச் சுற்று 1 மற்றும் எலிமினேட்டர் சுற்று போட்டிகளின் முடிவுகளை முதலில் டாஸ் தான் தீர்மானித்துள்ளது.

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் முடிந்து பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நடைபெற தொடங்கியுள்ளது. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

அகமதாபாத் மைதானத்தில் முதல் தகுதிச் சுற்று போட்டி மற்றும் எலிமினேட்டர் சுற்று போட்டி நடைபெறும் என்றும், சென்னையில் 2ஆவது தகுதிச் சுற்று போட்டி மற்றும் இறுதிப் போட்டி நடைபெற இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

அதன்படி நடைபெற்ற முதல் தகுதிச் சுற்று போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

பின்னர், எளிய இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 13.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டி சென்னையில் நடைபெறுகிறது.

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

இதையடுத்து நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அப்போது சாம்சன் ஒரு வார்த்தை சொன்னார், சன்ரைசர்ஸ் அணி டாஸ் ஜெயிச்சு பேட்டிங் எடுத்து தோல்வி அடைந்தது. இதன் காரணமாக பவுலிங் தேர்வு செய்தார்.

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக ரஜத் படிதார் 34 ரன்களும், விராட் கோலி 33 ரன்களும், மகிபால் லோம்ரார் 32 ரன்களும் எடுத்தனர். பின்னர் கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது, 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2ஆவது தகுதி சுற்று போட்டிக்கு முன்னேறியது.

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த ஆர்சிபி எலிமினேட்டர் சுற்றுடன் வெளியேறியது. இந்த மைதானத்தில் இதுவரையில் நடைபெற்ற போட்டிகளில் முதலில் பவுலிங் தேர்வு செய்த அணியே வெற்றி பெற்றிருக்கிறது. அதன்படி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தங்களுக்கு விழுந்த டாஸ் சாதகத்தை பயன்படுத்தி பவுலிங் தேர்வு செய்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும்.

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

ஆனால், பேட்டிங் தேர்வு செய்து மோசமாக விளையாடிய தோல்வியை தழுவியது. இதே நிலையில் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் முன்னெச்சரிக்கையாக பவுலிங் தேர்வு செய்து விளையாடியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 218 ரன்கள் குவித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு எலிமினேட்டர் போட்டியில் 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

இதில், வேதனை என்னவென்றால் இதுவரையில்17 சீசன்கள் விளையாடி ஒரு முறை கூட டிராபியை கைப்பற்றவில்லை என்பது தான். 3ஆவது முறையாக எலிமினேட்டர் சுற்று போட்டியுடன் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

Latest Videos

click me!