தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 55ஆக அதிகரித்துள்ளது. இதில், 4 பெண்களும் அடங்குவர்.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 55ஆக அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கடந்த 18-ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷ சாராயத்தை வாங்கி 150க்கும் மேற்பட்டோர் வாங்கி குடித்துள்ளனர். இதில், குடித்தவர்கள் அனைவருக்கும் வாந்தி கண் எரிச்சல் தலை சுற்றல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அலறியடித்து கொண்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம், சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அடுத்தடுத்து உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.
இதையும் படிங்க: நொடிக்கு நொடி அதிர்ச்சி.. கெட்டுப்போன மெத்தனால்! முன்பே கண்டறிந்த சாராய வியாபாரி! சிபிசிஐடி விசாரணையில் பகீர்
தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 55ஆக அதிகரித்துள்ளது. இதில், 4 பெண்களும் அடங்குவர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 31, புதுச்சேரி ஜிப்மரில் 3, சேலம் அரசு மருத்துவமனையில் 17, விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேர் மொத்தம் 55 பேராகும்.
இதையும் படிங்க: "இதே நடவடிக்கை அவர்கள் மீதும் பாயுமா?" கள்ளக்குறிச்சி விவகாரம்.. திமுகவிற்கு அழுத்தம் கொடுக்கும் K.C பழனிசாமி!
இதில், சிகிச்சையில் இருக்கும் 10 பேர் முழுமையாக கண்பார்வையை இழந்திருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது சிகிச்சையில் உள்ள 100க்கும் மேற்பட்டவர்களில் 21 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. கள்ளக்குறிச்சி விஷ சாராயம் மரணங்கள் தமிழ்நாட்டை மட்டும் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி விசாரணையில் கெட்டுப்போன மெத்தனால் சாராயத்தில் கலந்து விற்றதன் காரணமாகவே இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.