கைப்புள்ள ரிட்டர்ன்ஸ்... மீண்டும் வடிவேலு உடன் கூட்டணி அமைக்கும் சுந்தர் சி - சுடசுட வெளிவந்த அப்டேட்

First Published Jun 12, 2024, 9:50 AM IST

அரண்மனை 4 படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சுந்தர் சி இயக்க உள்ள அடுத்த படத்தில் வடிவேலு நகைச்சுவை நடிகராக நடிக்க உள்ளாராம்.

Sundar c

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த மாதம் திரைக்கு வந்த அரண்மனை 4 திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளிவந்த படங்களில் ரூ.100 கோடி என்கிற இமாலய வசூல் சாதனையை நிகழ்த்திய படமாக அரண்மனை 4 அமைந்தது. இப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, சந்தோஷ் பிரதாப், யோகிபாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

Director Sundar C

அரண்மனை 4 படத்தின் அதிரி புதிரியான வெற்றிக்கு பின்னர் இயக்குனர் சுந்தர் சி, கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. அப்படத்தில் மிர்ச்சி சிவா, விமல் ஆகியோர் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் ஹீரோயின் தேர்வு தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இதுதவிர நடிகை தமன்னாவை வைத்து புதிதாக ஒரு பேய் படம் இயக்க சுந்தர் சி திட்டமிட்டு வருவதாகவும் பேச்சு அடிபட்டது.

இதையும் படியுங்கள்... என்னை மகிழ்விக்கும் இடம் இது... எம்.பி ஆனதும் சத்குருவிடம் ஆசிபெற ஓடோடி வந்த கங்கனா ரனாவத் - போட்டோஸ் இதோ

Sundar C Next Movie

அப்படம் பற்றி தற்போது கூடுதல் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதன்படி அப்படத்தின் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் நடிக்க இருக்கிறாராம். இதற்கு முன்னர் சுந்தர் சி உடன் கூட்டணி சேர்ந்து வடிவேலு பணியாற்றிய வின்னர், தலைநகரம், நகரம் மறுபக்கம் ஆகிய திரைப்படங்களில் காமெடி காட்சிகள் வேறலெவலில் ஹிட் அடித்தன. இதனால் தமிழ் சினிமாவின் சக்சஸ்புல் காம்போவாக சுந்தர் சி - வடிவேலு கூட்டணி திகழ்ந்து வந்தது.

vadivelu team up with Sundar C

கலகலப்பு 3 பட பணிகளை முடித்த பின்னரே வடிவேலு நடிக்கும் படத்திற்கான படப்பிடிப்பை சுந்தர் சி தொடங்குவார் என கூறப்படுகிறது. தற்போது வடிவேலு கைவசம் மாரீசன் என்கிற படம் உள்ளது. இப்படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் உடன் இணைந்து நடித்து வருகிறார் வடிவேலு. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதன் ஷூட்டிங் ம்டிந்ததும் இப்படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர்.

இதையும் படியுங்கள்... புது வீட்டில் 2வது திருமண நாளை கொண்டாடிய விக்கி - நயன்... அதுவும் இந்த பிரபலங்கள் உடனா? வைரல் போட்டோஸ் இதோ

Latest Videos

click me!