Ramya Krishnan Net Worth: 53 வயதிலும் மகாராணி போல் வாழும் ரம்யா கிருஷ்ணா சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

First Published Apr 25, 2024, 3:51 PM IST

நடிகை ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகி பலரையும்... பிரமிக்க வைத்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
 

தென்னிந்திய திரையுலகில், கதாநாயகியாக நடித்து தற்போது அழுத்தமான குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் ரம்யா கிருஷ்ணன். இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 
 

ஒரு கட்டத்தில், ரம்யா கிருஷ்ணனுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த பின்னர் சன் டிவியில் வம்சம், தங்கம் போன்ற சீரியல்களில் கதாயாகியாக நடித்தார். அந்த சமயத்தில் தான், இவர் தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் நடித்த, 'பாகுபலி' திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. ரம்யா கிருஷ்ணன் திரையுலக வாழ்க்கையில் எப்படி படையப்பா ஒரு மாஸ்டர் பீஸாக அமைந்ததோ.. அதே போல் இந்த படமும் ரம்யா கிருஷ்ணனுக்கு சிறந்த கம் பேக்காக அமைந்தது.

பாகுபலி படத்திற்காக பல்வேறு விருதுகளையும் வென்றார். இந்த படத்தை தொடர்ந்து ஹீரோ - ஹீரோயின்களுக்கு அம்மாவாகவும், முன்னணி நடிகர்களின் படங்களை டார்கெட் செய்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணா நடித்த ஜெயிலர் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததோடு, 650 கோடிக்கு மேல் வசூல் சாதனையும் செய்தது. 
 

கடைசியாக இவர் நடிப்பில் மகேஷ் பாபு நடித்த குண்டூர் காரன் திரைப்படம் வெளியானது. இப்படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நடுநிலையான விமர்சனத்தை பெற்றாலும், மற்ற மொழி ரசிகர்களை பெருவாரியாக திருப்திப்படுத்த வில்லை.

ரம்யா கிருஷ்ணாவின் திரையுலக வாழ்க்கை போலவே அவரது திருமண வாழ்க்கையும் சக்ஸஸ் ஃபுல்லாக சென்று கொண்டிருக்கிறது. கிருஷ்ணா வம்சி என்பவரை 2003-ஆம் ஆண்டு இவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு தற்போது மகன் ஒருவரும் உள்ளார்.
 

சென்னை, ஹைதராபாத் போன்ற பல இடங்களில் இவருக்கு சொந்தமாக வீடுகள் உள்ளது. அதே போல், கார் பிரியரான ரம்யா பல சொகுசு கார்களை வைத்துள்ளார். தனித்துவமான நகைகளை அணிவதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். 
 

ஹீரோயினாக நடித்த காலங்களில் கூட லட்சங்களில் மட்டுமே சம்பளம் வாங்கிய ரம்யா கிருஷ்ணா... தற்போது தான் நடிக்கும் படங்களுக்கு 2 முதல் 3 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 98 முதல் 100 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. 
 

click me!