பொதுவாகவே, கோடை காலத்தில் வெள்ளை நிறம் தான் அனைவரின் முதல் சாய்ஸ். வெள்ளை நிற ஆடைகள் உடலை குளிர்ச்சியாகவும், வெப்பநிலையை பராமரிக்கவும் உதவும். ஆனால், வேறு சில வண்ணங்களும் உள்ளன. அவை கொளுத்தும் வெயிலில் உங்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும். எனவே, கோடைகாலத்தில் இதுபோன்ற சில வண்ணங்களைப் பற்றிய தகவல்கள் இந்த கட்டுரையில் சொல்லப்பட்டு இருக்கிறது. அந்த நிறத்தின் படி நீங்கள் ஆடைகளை அணிந்து கொண்டால் உங்களை நீண்ட நேரம் குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க முடியும்.