பாக்ஸ் ஆபிஸ் போட்டியில் சிவகார்த்திகேயனை புரட்டி எடுத்த சுந்தர் சி... அரண்மனை 4 செய்த தரமான சம்பவம்

First Published May 8, 2024, 12:59 PM IST

சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆன சிவகார்த்திகேயனின் குரங்கு பெடல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் செம்ம அடி வாங்கி இருக்கிறது.

Aranmanai 4, Sivakarthikeyan

தமிழ் சினிமாவிற்கு 2024-ம் ஆண்டு எதிர்பார்த்தபடி அமையவில்லை. கடந்த நான்கு மாதங்களாக ரிலீஸ் ஆன கோலிவுட் படங்கள் எதுவும் பெரியளவில் சோபிக்கவில்லை. இதனால் பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்து அதன்மூலம் லாபம் ஈட்டி வந்தனர் திரையரங்க உரிமையாளர்கள். அந்த வகையில் கடந்த மாதம் ரீ-ரிலீஸ் ஆன கில்லி திரைப்படம் தமிழகம் முழுவதும் சக்கைப்போடு போட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ.30 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.

Aranmanai 4 box office

நான்கு மாதங்களாக மந்த நிலையே நீடித்த நிலையில், மே மாதம் கோலிவுட்டுக்கு ஒரு கம்பேக் மாதமாக அமைந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 திரைப்படம் ரிலீஸ் ஆனது. தமன்னா, ராஷி கண்ணா, யோகிபாபு நடிப்பில் வெளியான இப்படம் பேமிலி ஆடியன்ஸை கவரும் வகையில் இருப்பதால் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் அரண்மனை 4 திரைப்படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதையும் படியுங்கள்... லேட்டா வந்தாலும் Thug Life படத்தில் மாஸாக எண்ட்ரி கொடுத்த சிம்பு... புழுதி பறக்க வெளிவந்த புரோமோ இதோ

Kurangu Pedal vs Aranmanai 4

இப்படம் ரிலீஸ் ஆகி ஐந்து நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.25 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து உள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டு பிளாக்பஸ்டர் ஹிட்டான முதல் தமிழ் படம் என்கிற பெருமை அரண்மனை 4 படத்துக்கு கிடைத்துள்ளது. மறுபுறம் அரண்மனை 4 படத்துக்கு போட்டியாக வெளிவந்த சிவகார்த்திகேயனின் குரங்கு பெடல் திரைப்படம் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் செம்ம அடி வாங்கி இருக்கிறது.

Kurangu Pedal Box Office

சிவகார்த்திகேயன் தயாரித்த குரங்கு பெடல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெறும் ரூ.30 லட்சம் மட்டுமே வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. அரண்மனை 4 அலையில் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கும் சிவகார்த்திகேயனின் குரங்கு பெடல் திரைப்படம் ஒரே வாரத்தில் திரையரங்குகளில் இருந்து அகற்றப்படவும் வாய்ப்புள்ளது. ஏனெனில் இந்த வாரம் கவினின் ஸ்டார் படம் ரிலீஸ் ஆவதால் அது குரங்கு பெடல் படத்துக்கு பெரும் சிக்கலாக அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்... Singer Mano: 'லெவன்' படத்திற்காக டி.இமான் இசையில்... முதல் முறையாக பாடிய பாடகர் மனோ!

click me!