பிசினஸை வேற லெவலில் டெவலப் செய்த நயன்தாரா.. இப்ப 9 Skin பொருட்கள் இந்த நாட்டிலும் கிடைக்கிறதாம்..

First Published Mar 12, 2024, 3:15 PM IST

நாட்டின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் இருக்கும் நயன்தாரா தனது பிசினஸிலும் மாஸ் காட்டி வருகிறார்.

தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் அவர், ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகி உள்ளார். நாட்டின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் நயன்தாரா இருக்கிறார்.

ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இதே போல் மற்ற மொழிகளிலும் பல உச்ச நட்சத்திரங்களுடன் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார். 

இதனிடையே இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு உயிர், உலக் என்ற 2 இரட்டை குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்த நயன்தாரா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்.

நயன்தாரா நாட்டின் பணக்கார பெண் நடிகைகளில் ஒருவராக கருதப்படுகிறார். இவரது சொத்து மதிப்பு சுமார் 200 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.. நடிப்பு என்பதை தாண்டி பல்வேறு தொழில் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். அந்த வகையில், தனது கணவர் விக்னேஷ் உடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை அவர் நடத்தி வருகிறார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மதிப்பு ரூ.50 கோடி என்று கூறப்படுகிறது.

சாய் வாலே என்ற பிரபலமான நிறுவனத்தில் நடிகை நயன்தாரா ரூ.5 கோடி முதலீடு செய்துள்ளார். இதில் இருந்தும் அவருக்கு வருமானம் வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு, டாக்டர் ரெனிதா ராஜனுடன் இணைந்து லிப் பாம் நிறுவனத்தை நயன்தாரா தொடங்கினார்,

இந்த நிறுவனம் 100 க்கும் மேற்பட்ட வெவ்வேறு லிப் பாம் வகைகளைக் கொண்ட முதல் பெரிய பிராண்ட் என்று கூறப்படுகிறது. அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் எண்ணெய் வணிகத்தில் சுமார் 100 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார்.. இந்த நிறுவனங்களில் குறிப்பிட்ட பங்குகளை நயன்தாரா வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஸ்கின் கேர் நிறுவனம் ஒன்றையும் தனது நண்பருடன் சேர்ந்து  அவர் நடத்தி வருகிறார். சமீபத்தில் மலேசியாவில் 9Skin என்ற சரும பராமரிப்பு தயாரிப்புகளை அறிமுகம் செய்தார். இந்த தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த Femi 9 என்ற பெண்களுக்கான சானிடரி நாப்கின் பிராண்டையும் அறிமுகம் செய்தார்.

நாட்டின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் இருக்கும் நயன்தாரா தனது பிசினஸிலும் மாஸ் காட்டி வருகிறார்.

click me!