ஸ்ருதி ஹாசனுடன் கட்டி பிடித்து ரொமான்ஸ் செய்த லோகேஷ் கனகராஜ்..! நடிகை ஆண்ட்ரியா ரியாக்ஷன் என்ன தெரியுமா?

First Published Mar 27, 2024, 12:35 PM IST

தன்னுடைய திரைப்படங்களில் கூட, காதலர்களை ரொமான்ஸ் செய்ய விடாத லோகேஷ் கனகராஜ்... ஆல்பம் பாடலில் ஸ்ருதிஹாசனுடன் ரொமான்ஸ் செய்தது பற்றி நடிகை ஆண்ட்ரியா கூறியுள்ள தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

கோவையில் பிறந்து வளர்ந்த லோகேஷ் கனகராஜ், MBA படித்து முடித்து விட்டு, கைநிறைய சம்பளம் வாங்கும் வங்கி வேலையில் பணியாற்றியவர். ஆனால் சினிமா மீது இருந்த காதல், வேலையை விட்டு விட்டு குறும்படம் இயக்கி தன்னுடைய திறமையை வெளிப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய குறும்படம் ஒன்றை, பார்த்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்... தான் தயாரித்த அந்தாலஜி படமான அவியலில் லோகேஷ் கனகராஜின் 'களம்' என்கிற குறும்படத்தை இடம்பெற செய்தார்.

இதை தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு முக்கோண காதல் கதையாக வெளியான, 'மாநகரம்' படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பலர் லோகேஷ் கனகராஜின் திரைக்கதையை புகழ்ந்து தள்ளினர். இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் கார்த்தியை வைத்து 'கைதி' படத்தை இயக்கினார்.

ஒரு நாளில் நடக்கும் விறுவிறுப்பான கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இப்படம், தளபதி விஜய்யின் 'பிகில்' படத்துக்கு போட்டியாக வெளியாகி, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சக்கை போடு போட்டது. 

lokesh kanagaraj

பின்னர் தளபதியை வைத்து 'மாஸ்டர்' படத்தை இயக்கிய லோகி.. கொரோனா ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கி இருந்த ரசிகர்களை, மீண்டும் திரையரங்கிற்கு கொண்டு வந்த படமாக மாறியது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசனை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெற்றார் லோகி. ஆரம்பத்தில் இருந்தே மிகவும் எதிர்பார்ப்பாட்ட இந்த படம், பல வருடங்களாக ஒரு வெற்றி படத்தை கொடுக்க போராடி வந்த உலக நாயகனுக்கு இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்தது. சுமார் 150 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படம், 450 கோடி வரை வசூல் சாதனை செய்தது.
 

Lokesh kanagaraj

இதைத்தொடர்ந்து மீண்டும் தளபதி விஜய்யை வைத்து, கடைசியாக வெளியான 'லியோ' படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் தளபதி விஜய் மற்றும் த்ரிஷாவுக்கு இடையே ஒரே ஒரு லிப் லாக் காட்சி இருந்ததே... லோகேஷ் படத்தில் இப்படி ஒரு சீன் இருக்கிறதா? என பலரையும் ஆச்சர்யப்பட வைத்தது. காரணம், லோகேஷ் கனகராஜின் படங்கள் என்றால், தண்ணி, தம்மு, போதை மருந்து, அடிதடி, துப்பாக்கி தோட்டா, குண்டு வீசுவது என ஒரே ரணகள காட்சிகள் தான் இருக்குமே தவிர... குதூகலமான காட்சிகளுக்கு இடம் இருக்காது. அப்படியே இருந்தால் கூட, காதலியை கழுத்தத்து கொன்று விடுவார். இதை சுட்டி காட்டி, விக்ரம் பட நாயகி காயத்ரி லோகேஷ் கனகராஜை ட்வீட் போட்டு கலாய்த்திருந்தார்.
 

ஆனால் சமீபத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் பாடி, கமல்ஹாசனின் வரிகளில்.. ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான, இனிமேல் ஆல்பம் பாடல் மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்திருந்த லோகேஷ் கனகராஜ், யாரும் சற்றும் எதிர்பாராத விதத்தில் ஸ்ருதி ஹாசனுடன் ரொமான்ஸில் புகுந்து விளையாடி இருந்தார். 

இது ஒருபுறம் இருக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான... மாஸ்டர் படத்தில் பணியாற்றய நடிகை ஆண்ட்ரியா, கா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது.. லோகேஷ் கனகராஜின் இந்த ரொமான்டிக் பாடல் குறித்து கேள்வி எழுப்பிய போது... 'அவர் படத்திற்கு கதை எழுதும் போது... இந்த ரொமான்ஸ் எல்லாம் வரவில்லையா? என நான் கேள்வி எழுப்பமாட்டேன் என... கலாய்க்கும் விதத்தில் பேசிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். 

click me!