கோடையில் கர்ப்பிணிகள் கண்டிப்பாக தர்பூசணி சாப்பிட வேண்டும்.. காரணம் தெரிஞ்சா விடமாட்டீங்க!

First Published May 7, 2024, 3:11 PM IST

கர்ப்ப காலத்தில் தர்பூசணி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

கோடையில் அதிகமாக கிடைக்கும் ஒரு பழம் எதுவென்றால், அது தர்பூசணி தான். இந்த பழத்தில் அதிகபட்ச நீர் உள்ளதால், இது கோடைக்கு உகந்த பழமாகும். எனவே, இதை கோடைக்காலத்தில் சாப்பிட்டால் உடலில் நீர்ச்சத்து குறையாது. இதில், தண்ணீருடன், நார்ச்சத்து, இரும்பு, பல வகையான வைட்டமின்கள், மெக்னீசியம், பொட்டாசியம், லைகோபீன் போன்ற சத்துக்கள் உள்ளது.

தர்பூசணி கர்ப்ப காலத்தில் ஏற்படும் காலை சுகவீனம், நீர்ச்சத்து குறைபாடு, அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் கர்ப்பிணிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. எனவே, கர்ப்ப காலத்தில் தர்பூசணி சாப்பிடுவதால் என்ன பிற நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு நெஞ்செரிச்சல் மற்றும் வாயு போன்ற செரிமான பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படும். எனவே, தர்பூசணி சாப்பிட்டால், அதில் உள்ள குளிர்ச்சியான பண்புகள் எரியும் உணர்வையும் வாயுவையும் தணிக்கும்.

கை, கால் வீக்கம் பிரச்சனை இருந்தால் தர்பூசணி சாப்பிடுங்கள். கர்ப்ப காலத்தில் வீக்கம் பிரச்சனை மிகவும் பொதுவானது. தர்பூசணியில் அதிக அளவு தண்ணீர் உள்ளது என்பது உங்களுக்கு தெரியும். இது நரம்புகள் மற்றும் தசைகளில் அடைப்பைத் தடுக்கிறது மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தாது.

கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பெண்கள் பெரும்பாலும் காலை சுகவீனம் மற்றும் சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்படுவார்கள். எனவே, காலையில் தர்பூசணி சாப்பிட்டால், நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.

கர்ப்ப காலத்தில் நீரிழப்பு பிரச்சனை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லாதது தான். அதுவும் கோடையில் நீரிழிவு பிரச்சனை வர வாய்ப்பு அதிகம். அதுவும் நீரிழப்பு முன்கூட்டிய பிரசவத்தின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே கோடையில் அதிகம் கிடைக்கும் பலமான தர்பூசணியை சாப்பிட்டு வந்தால்  நீரிழப்பு பிரச்சனை வராது. 

இதையும் படிங்க: Diabetes : சர்க்கரை நோயாளிகள் தர்பூசணி சாப்பிடலாமா..? மீறினால் என்ன நடக்கும்..??

பெரும்பாலும் கர்ப்ப காலத்தில், சில பெண்கள் முகப்பரு, நிறமி,  தோலழற்சி போன்ற தோல் தொடர்பான பிரச்சினைகள் வரும். தர்பூசணியில் நார்ச்சத்து உள்ளது. இது குடல் இயக்கத்தை சீராக வைத்து, வயிற்றை சுத்தப்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கலை தடுக்கிறது. இதனால், உணவும் எளிதில் ஜீரணமாகும். வயிறு சுத்தமாக இருந்தால் தோல் தொடர்பான பிரச்சனைகள் வராது.

இதையும் படிங்க: Watermelon : கோடையில் தர்பூசணியை அதிகம் சாப்பிடாதீங்க.. இந்த பிரச்சினைகள் வரும்.. ஜாக்கிரதை!

கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதை அதிகரிக்க, நீங்கள் தர்பூசணி சாப்பிடலாம். இந்தப் பழத்தில் லைகோபீன் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது ப்ரீக்ளாம்ப்சியாவின் அபாயத்தைக் குறைக்கிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!