கோலிவுட்டின் அடுத்த லேடி சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

First Published Jan 10, 2024, 9:42 AM IST

தமிழ் திரையுலகில் அடுத்த லேடி சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Aishwarya rajesh

சன் டிவியில் ஒளிபரப்பான புகழ்பெற்ற காமெடி நிகழ்ச்சியான அசத்தப்போவது யார் ஷோ மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இதையடுத்து மாநாட மயிலாட என்கிற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று டைட்டிலையும் தட்டிதூக்கினார் ஐஸ்வர்யா ரஜேஷ். பின்னர் கடந்த 2011-ம் ஆண்டு ரிலீஸ் ஆன அவர்களும் இவர்களும் படம் மூலம் நடிகையான அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஆரம்ப காலகட்டத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு பெரியளவில் கிடைக்கவில்லை.

Aishwarya rajesh Birthday

இதனால் எந்த ரோலாக இருந்தாலும் நடிக்கலாம் என முடிவெடுத்த அவர், காக்கா முட்டை திரைப்படத்தில் 2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் அவர் எடுத்த அந்த துணிச்சலான முடிவு தான் அவரது கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்ததோடு விருதுகளும் குவிந்தன. இதையடுத்து ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பட வாய்ப்புகள் மளமளவென குவிந்தன.

இதையும் படியுங்கள்... அயலான் படத்தின் அதிகாலை காட்சிக்கு அனுமதி அளித்ததா அரசு? தயாரிப்பு நிறுவனத்தின் பதிவால் குழம்பிய ரசிகர்கள்

Aishwarya rajesh Age

பின்னர் பன்னையாரும் பத்மினியும், தர்மதுரை, வெற்றிமாறனின் வடசென்னை, சிவகார்த்திகேயன் தயாரித்த கனா என பல்வேறு ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். கனா படத்தின் வெற்றிக்கு பின்னர் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அதிகளவில் கிடைத்தது. நயன்தாராவுக்கு அடுத்தபடியாக அதிகளவில் கதையின் நாயகியாக நடிப்பதால் இவரை அடுத்த லேடி சூப்பர்ஸ்டார் என்றும் ரசிகர்கள் அழைக்கத் தொடங்கினர்.

Aishwarya rajesh Salary

இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு போன்ற பிற மொழிகளிலும் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், அடுத்ததாக இந்தியிலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். தொகுப்பாளினியாக அறிமுகமாகி இப்படி பான் இந்தியா நடிகையாக உயர்ந்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று தனது 34-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.

Aishwarya rajesh Net Worth

இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சொத்து மதிப்பு பற்றி தற்போது பார்க்கலாம். அதன்படி ஒரு படத்தில் நடிக்க ரூ.3 கோடி வரை சம்பளமாக வாங்கி வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ரூ.25 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர விளம்பரங்களில் நடிப்பதன் மூலமும் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறாராம் ஐஸ்வர்யா.

இதையும் படியுங்கள்... கிளீன் ஷேவ் லுக்கில் மாஸ் என்ட்ரி.. ரசிகர்களை சந்தித்த தளபதி விஜய் - G.O.A.T பட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரல்!

click me!